அரசு டாக்டர்கள் ஜூலை 6ல் அடையாள வேலை நிறுத்தம்
திருநெல்வேலி: அரசு டாக்டர்கள் சங்கம் ஜூலை 6ம் தேதி அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொள்கிறது.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் நெல்லை மாவட்ட கிளையின் பொதுகுழு கூட்டம் நெல்லையில் நேற்று நடந்தது. டாக்டர் முகமது ரபீக் வரவேற்றார். மாவட்ட தலைவர் டாக்டர் கண்ணன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில தலைவர் டாக்டர் செந்தில் பேசுகையில்,
ஆறாவது ஊதியகுழுவின் பரிந்துரையின்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஊதியம் மற்றும் பதவி உயர்வினை தமிழக டாக்டர்களுக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்து டாக்டர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இருப்பினும் டாக்டர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 23ம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
போராட்டத்தின் தொடர்ச்சியாக வரும் 30ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை அரசு திட்டங்கள் புறக்கணிப்பு போராட்டத்தில் தமிழக அரசு டாக்டர்கள் சங்கத்தினர் ஈடுபட உள்ளனர்.
வரும்முன் காப்போம் முகாம், அரசு மருத்துவ முகாம்கள், மாணவர்களுக்கு எடுக்கப்படும் வகுப்புகள், போஸ்ட்மார்டம் சர்பிகேட் போன்றவை போராட்டத்தின் போது புறக்கணிக்கப்படும்.
வரும் ஜூலை 6ம் தேதி டாக்டர்கள் சங்கத்தினர் ஒருநாள் அடையாள வேலைநிறுத்ததிலும் ஈடுபடுகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications