நிதி மோசடி- 2 ஊராட்சி தலைவர்கள் டிஸ்மிஸ்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் அரசு நிதியை கையாடல் செய்த இரு ஊராட்சித் தலைவர்களை பதவி நீக்கம் செய்து, தமிழக அரசு உத்தரவிடுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு..
சிவகங்கை மாவட்டம், அரசனூர் ஊராட்சித் தலைவராக இருந்தவர் தேவராஜ். இவர் கடந்த 2005-06ல் ஒதுக்கப்பட்ட அரசு நிதி, மற்றும் 2006-07ல் சட்டசபை தொகுதி நிதி மற்றும் ஊராட்சி நிதியில் முறையற்ற செலவு செய்து, 2 லட்சத்து 21 ஆயிரத்து 42 ரூபாய் கையாடல் செய்துள்ளார்.
அரசு சட்ட திட்ட விதிமுறைகளை மீறி நிதியை தவறாக பயன்படுத்திய காரணத்தால், அரசு விதி முறைகளின்படி ஊராட்சித் தலைவர் பதவியிலிருந்து தேவராஜ் நீக்கம் செய்யப்பட்டார்.
அதே போன்று இதே மாவட்டத்தில் முடிக்கரை ஊராட்சித் தலைவராக செயல்பட்டு வந்தவர் தென்னரசு.
இவர் கடந்த 2007 ம் ஆண்டு ஜனவரி 23 ம் தேதி முதல் 31 ம் தேதி வரை நடந்த தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட வேலைக்கு நடைபெற்ற பணியில் பயனாளிகளைப் போல் போலி கையெழுத்தைப் போட்டு, 17 ஆயிரத்து 950 ரூபாய் கையாடல் செய்துள்ளார்.
இதனால் இவரும் ஊராட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்படுள்ளார் என அந்த குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications