ஜமைக்காவில் 'ஸ்வைன் ப்ளூ'-இந்திய அணிக்கு கூடுதல் பாதுகாப்பு
ஜமைக்கா: வெஸ்ட இண்டீசில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் அங்கு விளையாட சென்றிருக்கும் இந்திய வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்படும் என ஜமைக்கா அரசு தெரிவி்த்துள்ளது.
பன்றி காய்ச்சல் அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட வட அமெரிக்க நாடுகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தங்கியிருக்கும் ஜமைக்காவில் ஸ்வைன் ப்ளூ வேகமாக பரவி வருகிறது. இங்கு இதுவரை 21 பேருக்கு ஸ்வைன் ப்ளூ இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்கு வரும் ஜூலை, ஆகஸ்டில் நடக்கவிருந்த கரீபியன் யூனியன் கோப்பை கால்பந்து போட்டிகள் தள்ளி வைக்கப்ப்டடுள்ளன.
இந்நிலையில் அங்கு விளையாடி வரும் இந்திய அணிக்கு இந்த நோயின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிக்க விசேஷ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜமைக்கா அமைச்சர் ரூடி ஸ்பென்சர் கூறுகையில்,
பொது மக்கள் கூடும் விளையாட்டு மைதானங்கள் போன்ற இடங்களில் ஸ்வைன் ப்ளூ வைரஸ் பரவாமல் இருக்க தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இது தொடர்பாக உள்ளூர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளோம். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களை கிரிக்கெட் மைதானத்துக்கு அனுமதிக்க மாட்டோம்.
அடுத்து நடக்கவிருக்கும் மூன்று ஒரு நாள் போட்டிகளின் போது நோய் இருப்பவர்களை கண்டறிந்து மைதானத்துக்குள் நுழைய விடாமல் தடுக்கும் பணியில் 40 மருத்துவ அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர். வீரர்களுக்கு விசேஷ பாதுகாப்பு அளிக்கப்டும் என்றார்.
இன்று இவ்விரு அணிகளும் மோதும் இரண்டாவது ஒரு நாள் போட்டி நடக்கிறது.
இந்தியாவில் 91 பேருக்கு 'ஸ்வைன்'...
இதை தொடர்ந்து தற்போது இந்த நோய் அந்த நாடுகளில் இருந்து வருபவர்களின் மூலம் இந்தியாவுக்குள் பரவி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து ஜெர்மனி வாயிலாக பெங்களூர் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர்கள் ஸ்வைன் ப்ளூவால் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே போல் டெல்லியில் 9 வயது சிறுவன் ஒருவனுக்கும், இரண்டு பெண்கள், ஒரு குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் என நான்கு பேருக்கும் ஸ்வைன் ப்ளூ இருப்பது சோதனையில் தெரிய வந்துள்ளது. மேலும் பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் ஒருவருக்கு ஸ்வைன் ப்ளூ உறுதியாகியுள்ளது.
இதை தொடர்ந்து இந்தியாவில் ஸ்வைன் ப்ளூவால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் பலரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டு வருவதால் இந்த நோயின் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை மேலும் கூடும் என தெரிகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications