முல்லை பெரியாறு அணையில் 'சேட்டன்கள்' சேட்டை!

தமிழக-கேரள எல்லையில் உள்ள குமுளி-தேக்கடி அணை எனப்புடம் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த தமிழகம் கோருவதை கேரளம் ஏற்க மறுக்கிறது.
அணை பலவீமான உள்ளதாகக் கூறி அதை இடித்துவிட்டு புதிய அணை கட்டப் போவதாகக் கூறி வருகிறது. இதன்மூலம் தமிழகத்துக்கு நீர் தருவதைத் தடுக்கும் வேலைகளில் 'சேட்டன்கள்' ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 19ம் தேதி எர்ணாகுளம் மாவட்டம் மலையார்டு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் வல்லக்கடவு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ரிக்டர் அளவுகோளில் 3.3 புள்ளிகள் பதிவாகி இருப்பதாக கூறி, நேற்று கேரள பொதுப் பணித்துறை அதிகாரிகள் முல்லை பெரியாறு அணையை திடீர் ஆய்வு செய்தனர்.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் அப்போது தமிழக அதிகாரிகள் யாருமே அணைப் பகுதியில் இல்லை. தமிழகத்திடம் தெரிவிக்காமலேயே 'சேட்டன்கள்' இந்த சேட்டையைச் செய்தனர்.
கட்டப்பனை செயற் பொறியாளர் ஜார்ஜ் டேனியல் என்பவர் தலைமையில் உதவிப் பொறியாளர் நிர்மல் உள்பட 7 பேரை கொண்ட குழுர் அணையை சுற்றிச் சுற்றி வந்து ஆய்வு செய்தது.
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் பேசுகையில்,
முல்லை பெரியாறு அணை கட்டி 114 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதனால் அணையின் பல பகுதியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. அணையின் கைப்பிடி சுவரிலும் விரிசல் காணப்படுகிறது. இந்த ஆய்வின் அறிக்கையை கேரள அரசுக்கு விரைவில் சமர்ப்பிப்போம் என்றனர்.
தேர்தலுக்காக மக்களை ஏமாற்ற..
இது குறித்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், கேரளத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அதில் கம்யூனிஸ்டுகளுக்கு வெற்றி நிச்சயமில்லை. இதனால் மக்களை திசை திருப்பி இந்தப் பிரச்சனையைக் கிளப்பிவிட்டு ஓட்டு வாங்க முயல்கிறார்கள்.
மேலும் கம்யூனி்ஸ்டுகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை. கோஷ்டிப் பூசல் உச்சத்தில் உள்ளது. அதை மறைக்கவும் மக்களை கவனம் திரும்ப வைக்கவும் முல்லைப் பெரியாறு அணையில் சோதனை என்று வேலையைக் காட்டுகிறார்கள் என்றார்.
காவிரி டெல்டாவில் நீரேற்று எந்திரம் மூலம் பாசனம்:
இந் நிலையில் இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பேசிய துரைமுருகன்,
காவிரி டெல்டா பகுதிக்கு தஞ்சை மாவட்டத்தில் 5 இடங்களிலும், திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலா 12 இடங்களிலும் மொத்தம் 29 இடங்களில் நீரேற்று எந்திரம் மூலம் பாசன வசதி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
முக்கொம்பு புதுவாத்தலை வாய்க்காலில் தண்ணீர் விடவும் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications