திருப்பூர்: இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்-ஜீப் சூறை
திருப்பூர்: திருப்பூர் அருகே போலீஸ் இன்ஸ்பெக்டரை தாக்கி, ஜீப்பை வன்முறை கும்பல் ஒன்று சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அவினாசி அருகே பேராநாயக்கன்புதூரை சேர்ந்தவர் ராமு. இவரை ஒரு வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேலு காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
போகும் வழியில் இன்ஸ்பெக்டரின் ஜீப்பை, ராமுவின் உறவினர்கள் சிலர் வழிமறித்துள்ளனர். பின்னர் அவர்கள் இன்ஸ்பெக்டரை சுற்றுவளைத்து கடுமையாக தாக்கி உள்ளனர். ராமுவும் அவர்களுடன் சேர்ந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து அந்த கும்பல் இன்ஸ்பெக்டரின் ஜீப்பையும் அடித்து நொறுக்கியது. இதையடுத்து தகவல் அறிந்த மற்ற போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் தங்கவேலுவை தாக்கிய ராமு மற்றும் அவரது உறவினர்கள் மீது அவினாசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அவினாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications