பாஜக ஓவர்.. திமுக கூட்டணிக்கு தயார்: கார்த்திக்
மதுரை: மக்களவைத் தேர்தலுக்குப் பின் பாஜக கூட்டணிக் கட்சியினர் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. இனி வரும் தேர்தல்களில் திமுகவுடன் கூட்டணி சேரத் தயாராக இருக்கிறேன் என்று அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சித் தலைவர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கட்சி வளர்ச்சி குறித்து தற்போது கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. விருதுநகர், சேலம், தேனி, திண்டுக்கல், நீலகிரி ஆகிய மாவட்ட நிர்வாகிகள் மாற்றப்படவுள்ளனர்.
மக்களவைத் தேர்தலில் கட்சியினர் சிலர் செய்த தவறால் படுதோல்வி ஏற்பட்டது. அந்தத் தவறுகளை சரிசெய்து கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனது கொள்கை மக்களைத் தாமதமாகவே சேரும். திமுக அரசின் பல கொள்கைகள், திட்டங்கள் வரவேற்கத்தக்கதாக உள்ளன. மத்திய அரசும் தற்போது தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுவது பாராட்டத்தக்கது.
துணை முதல்வர் ஸ்டாலின் நன்றாகச் செயல்படுகிறார். தமிழக அரசியலில் நல்லது செய்தால் பாராட்டும் சூழல் இல்லாதது துரதிருஷ்டவசமானது.
திமுக அரசு தொடர்ந்து இதே போல நன்றாக செயல்பட்டால் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயாராக உள்ளேன்.
மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜக கூட்டணிக் கட்சியினர் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. நான் தமிழக முதல்வராக ஆசைப்படவில்லை.
இப்போது மணிரத்னம் இயக்கத்தில் அசோகவனம் படத்தில் நடித்து வருகிறேன் என்றார்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications