மாணவனை கண்டுபிடிக்க உதவிய எஸ்.எம்.எஸ்
சென்னை: காணாமல் போய் மயங்கிய நிலையில் கிடந்த மாணவனை போலீஸார் மீட்க ஒரு எஸ்.எம்.எஸ். உதவியுள்ளது.
சென்னை வேளச்சேரி தமிழ்நாடு குடியிருப்பு வாரிய காலனி பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் புவனேஷ் (10). 4-ம் வகுப்பு படித்து வருகிறான்.
காலனியில் விளையாடிக் கொண்டிருந்த புவனேஷை திடீரெனக் காணவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
கணேஷ் இதுகுறித்து மூலம் மை சன் லாஸ்ட் என மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனின் புகார் பிரிவுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.
இதையடுத்து ஆணையர் உத்தரவுப்படி வேளச்சேரி போலீஸார் தேடுதலில் குதித்தனர்.
கணேஷின் செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டு அவரது வீட்டிற்கு சென்றனர். அங்கு புவனேஷின் படத்தை வாங்கிக் கொண்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஆட்டோ டிரைவர்களிடம் புவனேஷ் படத்தை காட்டி விசாரித்தனர்.
அப்போது ஒரு ஆட்டோ டிரைவர் புவனேஷை வேளச்சேரி பஸ் நிலையத்தில் பார்த்ததாக தெரிவித்தார். அவரது உதவியோடு பஸ் நிலையத்தில் மயங்கிய நிலையில் அமர்ந்திருந்த புவனேஷை போலீசார் மீட்டனர்.
என்ன ஏது என்று அவனிடம் விசாரித்தபோது, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை. மயங்கிய நிலையில் பஸ் நிலையத்தில் இருந்தேன் என்று கூறியுள்ளான் புவனேஷ்.
அவனை யாரேனும் மயக்க மருந்து தெளித்து கடத்த முயன்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
காலை 9 மணிக்கு எஸ்.எம்.எஸ். தகவல் கொடுத்தார் கணேஷ். அடுத்த 20 நிமிடத்தில் மாணவன் மீட்கப்பட்டு விட்டான்.
சென்னை மாநகர ஆணையர் அலுவலகத்தில் இப்போது எஸ்.எம்.எஸ். பிரிவு ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் எந்தவிதமான புகாரையும் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கலாம். அதன் பேரில் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் அலர்ட் செய்யப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மக்களிடையே இந்த எஸ்.எம்.எஸ். புகார் வசதி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று ஒரு மாணவனைக் காத்துள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications