சென்னை சென்டரலில் 2 கொள்ளையர் கைது-200 பவுன் நகை பறிமுதல்
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் நகைகளை கொள்ளையடிக்க முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சுமார் 200 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
சென்னையிலிருந்து மங்களூர் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் இந்று காலை சுமார் 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புறப்பட தயாராகி கொண்டிருந்தது.
அப்போது அங்கு பிளாட்பார்மில் நின்று கொண்டிருந்த பெண்ணிடம் சுமார் 50 வயது மதிக்கத்தக்க இரண்டு பேர் கத்தியை காட்டி மிரட்டி அவரது தங்கத்தாலியை பறித்தனர். இது சுமார் 2 பவுன் இருக்கும் என கூறப்படுகிறது.
இதேபோல் மற்றொரு பெண் பயணியை மிரட்டிய போது அவர் சத்தம் போட்டு மற்றவர்களை உதவிக்கு அழைத்தார். இதையடு்தது அந்த மர்ம நபர்கள் இருவரும் தப்பியோட முயன்றனர். ஆனால், அதற்குள் பெரும் கூட்டம் கூடிவிட்டது. பொதுமக்கள் அவர்கள் இருவரையும் சுற்றி வளைத்து பிடித்து ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட ரயில்வே டிஐஜி சிவனாண்டி நேரில் சென்று அந்த இரண்டு கொள்ளையர்களிடம் விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர்கள் இருவரும் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களது பெயர் ஸ்ரீவஸ்தா ( 50), கம்னாத் ஜேக்கப் (49) என்றும் தெரிய வந்தது.
மேலும், அவர்கள் தாங்கள் 10க்கும் மேற்பட்ட ரயில்களில் பயணிகளிடம் ஏராளமான நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்ததையும் ஒத்துக் கொண்டனர். ஏசி பெட்டிகளில் பயணிகளை போல் ஏறி இரவு அனைவரும் தூங்கிவிடும் நேரத்தில் அவர்களது பெட்டியை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை திருடுவது தங்கள் வழக்கம் என தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் இருந்த திருட்டு நகைகள் சுமார் 200 பவுனை பறிமுதல் செய்தனர். அந்த நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications