புதன்கிழமையன்று மைக்கேல் ஜாக்சன் உடல் அடக்கம்?

உடல் அடக்கம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து இன்று பாதிரியார் அல் ஷார்ப்டனுடன் ஆலோசிக்கவுள்ளனர் ஜாக்சன் குடும்பத்தினர்.
ஜாக்சனின் உடல் அடக்கத்தைத் தொடர்ந்து அவருக்கு மிகப் பெரிய நினைவிடம் ஒன்றையும் அமைக்க ஜாக்சன் குடும்பத்தினர் தீர்மானித்துள்ளனர். அதேபோல உலகின் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் நினைவிடம் அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஜாக்சனின் மறைவுச் செய்தி குறித்து மீடியாக்களில் வந்துள்ள செய்திகளால் ஜாக்சன் குடும்பத்தினர் மிகவும் வேதனை அடைந்துள்ளதாக பாதிரியார் அல் ஷார்ப்டன் தெரிவித்துள்ளார்.
ஜாக்சனின் புகழை மட்டும் குறிப்பிடாமல் கடன் சிக்கல், ஓரினச் சேர்க்கை வழக்குகள், தோல்வி அடைந்த திருமணங்கள் உள்ளிட்டவை குறித்தும் மீடியாக்கள் விரிவாக செய்தி வெளியிட்டது தங்களை வருத்தமடையச் செய்ததாக ஜாக்சன் குடும்பத்தினர் கூறியதாக அல் ஷார்ப்டன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications