சென்னை: சட்டவிரோத குடியேற்றம்-செக் வாலிபர் கைது
சென்னை: செக் குடியரசில் வேலை வாங்கி தருவதாக கூறி இந்தியர்களை சட்ட விரோதமாக குடியேற்றியதாக அந்நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
சென்னை அசோக்நகரில் அகூரா நெட்வோர்க்ஸ் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் முகமது ரபீக். இவர் செக் குடியரசு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி தஞ்சாவூர் மற்றும் பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சுமார் 29 வாலிபர்களிடம் பணம் வாங்கினார்.
அவர்களை செக் குடியரசை சேர்ந்த நோவாட்னி பிரான்டிசெக் என்ற 30 வயது வாலிபர் மூலம் அந்நாட்டு அனுப்பி வைத்தார். ஆனால், அவர்கள் யாருக்கும் முறைப்படி விசா எதுவும் வழங்கப்படவில்லை என புகார் கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் முகமது ரபீக், நாதன், உமர் அசன், சுவாமிநாதன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.
அதே நேரத்தில் நோவாட்னி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய சென்னை நீதிமன்றம் வாரன்ட் பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஜனவரி முதல் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் நோவாட்னி எப்படியும் இந்தியா வருவார் என்று நம்பிய சென்னை போலீசார் அவரை விமானத்தில் வைத்து கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் இருக்கும் அனைத்து சர்வதேச விமான நிலையங்களுக்கும் அவரது புகைப்படத்தை அனுப்பினர்.
இதையடுத்து கடந்த 24ம் தேதி மும்பை விமான நிலையத்தில் வைத்து நோவாட்னி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை இரண்டு வாரம் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.
-
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications