வேலூர் அருகே யானை மிதித்து பெண் பலி!
வேலூர்: வேலூர் அருகே அப்பாவி பெண்ணை காட்டு யானை துரத்தி காலால் மிதித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ளது ஜவ்வாது மலைப் பகுதி. இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குட்டி யானைகள் உட்பட 9 யானைகள் அப்பகுதியில் உள்ள மலை கிராமங்களுக்குள் புகுந்து வயல்வெளிகளை நாசப்படுத்தியுள்ளது.
இதை அறிந்த வனத்துறையினர் கிராம மக்களுடன் சேர்ந்து தீப்பந்தம் மற்றும் முரசு கொட்டி யானை கூட்டத்தை விரட்டியடிக்க முயன்றனர். ஆனால் யானைக் கூட்டம் காட்டுக்குள் செல்லாமல் கிராமங்க பகுதிகளிலேயே தங்கிவிட்டது.
இந்த நிலையில், அப்பகுதியில் உள்ள சின்னவட்டம் கிராமத்திற்கு ஒரு சுப நிகழ்ச்சிக்காக சென்ற 10 பேரை யானைகள் கூட்டம் திடீரென துரத்தியுள்ளது. இதையடுத்து அவர்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர்.
அவர்களில் கோவிந்தனின் மனைவி காளியம்மாள் (38) என்பவரை காட்டு யானை ஒன்று காலில் போட்டு மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார். தகவல் அறிந்த வனத்துறையினர் காளியம்மாளின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து, கிராம மக்களுடன் வனத்துறையினர் இணைந்து காட்டு யானைகள் கூட்டத்தை விரட்டி அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications