ஏழைகளுக்கு தரமான மருந்து அளிக்கும் ராஜீ்வ் மருந்து திட்டம்: மு.க.அழகிரி அறிவிப்பு

தரமான, உயர்ந்த ரக மருந்துகளின் விலை இமயத்தைத் தொடும் வகையில் உள்ளது. வசதி படைத்தவர்களால் மட்டுமே இந்த மரு்நதுகளை வாங்க முடிகிறது.
இதன் காரணமாக ஏழை எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளை மட்டுமே முழுமையாக நம்பியிருக்க வேண்டியுள்ளது. அங்கும் கூட சில மருந்துகளை வெளியிலிருந்து வாங்கும்படி கூறுகின்றனர். ஆனால் அவற்றை வாங்கும் அளவுக்கு ஏழை எளிய மக்களின் பொருளாதார நிலை இல்லை.
இதைக் கருத்தில் கொண்டே ராஜீவ் காந்தி மருந்துத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மருந்துகள் வாங்கும் மாநில, அரசுகளின் மருத்துவத் துறைக்கு மானியம் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற மாநில அரசு மருத்துவமனைகளுக்கு ஜெனரிக் மருந்துகள் வாங்க வேண்டும். அம் மருந்துகளையே அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும்.
இதனால் குறைந்த விலைக்கு தரமான மருந்துக்களை அதிக அளவில் வாங்கி விநியோகிக்க முடியும். மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாகவே இந்த மருந்துகள் வழங்கப்படும்.
முதல் கட்டமாக இந்தத் திட்டம் தமிழகம் மற்றும் ராஜஸ்தானில் தொடங்கப்படுகிறது. இந்தத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யக் கோரி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை அமைச்சர் அழகிரி சந்தித்து கோரிக்கை விடுத்தார். அதை ஏற்று நிதியமைச்சகமும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்தத் திட்டம் தொடர்பான அறிவிப்பு பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில் இடம் பெறவுள்ளது.
தமிழகத்தில் தற்போது 48.63 லட்சம் குடும்பத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். ராஜஸ்தானில் 15 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளன.
இத்தனை பேருக்கும் இலவசமாக மருந்துகள் தருவதாக இருந்தால் அது மத்திய அரசுக்கு மிகப் பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்தும். இந்தத் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தவும் அழகிரி ஆர்வமாக உள்ளார். அப்போது பொருளாதார சுமை மேலும் அதிகரிக்கும்.
இருப்பினும் ஏழை எளிய மக்களுக்கு தரமான மருந்துகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதில் மு.க.அழகிரி உறுதியாக உள்ளாராம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications