பிலிபித்-வருண் வெற்றியை எதிர்த்து மாமா வழக்கு
Subscribe to Oneindia Tamil

குறிப்பிட்ட மதத்திற்கு எதிராக துவேஷமான கருத்துக்களைக் கூறி வாக்குகளைப் பெற்று வருண் காந்தி வென்றுள்ளார். எனவே இதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என அந்த வழக்கு கோரியுள்ளது.
இதுதொடர்பாக பிலிபித் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சிங் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். இவர் வருண் காந்தியின் தாய் மாமன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சிங்கின் வக்கீல் சர்மா கூறுகையில், குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக துவேஷக் கருத்துக்களைக் கூறி வருண் காந்தி பிரசாரம் செய்தார். இது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123 (3) வது பிரிவின் கீழ் குற்றமாகும்.
எனவே இந்த தேர்தல் செல்லாது என்று அறிவிக்க்க கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications