புலிளின் கடல் ஏவுகணைகள் சிக்கின!

விடுதலைப் புலிகள் வசம் இரு்நது வந்த பகுதிகளை மீட்டுள்ள ராணுவம் தற்போது புலிகள் அப்பகுதிகளில் புதைத்து வைத்து போயுள்ள ஆயுதங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
வன்னிப் பகுதியில் நிறைய ஆயுதங்களையும், வெடிபொருட்களையும், நீர்மூழ்கிக் கப்பலையும் கண்டுபிடித்த இலங்கை ராணுவத்தினர் தற்போது பெரிய கப்பல்களைத் தாக்கப் பயன்படும் டார்பிடோ குண்டுகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
புதுக்குடிப்பாறை என்ற இடத்தில் 2 டார்பிடோ குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றை ஏவப் பயன்படுத்தும் லாஞ்சர்களையும் மீட்டுள்ளனர்.
12 அடி ஆழத்திற்கு மண்ணில் இவை புதைத்து வைக்கப்பட்டிருந்தன.
இந்த டார்பிடோ குண்டு, 26 அடி நீளம், 5.7 அடி சுற்றளவு கொண்டது. இவை தவிர கப்பலை தண்ணீருக்குள்ளேயே வைத்து தகர்க்கக் கூடிய சக்தி வாய்ந்த குண்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மற்றொரு இடத்தில் சக்கரங்கள் அகற்றப்பட்ட பீரங்கி வண்டி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 9 பீரங்கிகள் மற்றும் குண்டுகளையும் அப்பகுதியிலிருந்து ராணுவத்தினர் மீட்டனர்.












Click it and Unblock the Notifications