வயதான தமிழர்கள் குடும்பத்தினருடன் இணைய இலங்கை அரசு அனுமதி

Subscribe to Oneindia Tamil

Tamils in Sri Lanka
கொழும்பு: இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியுள்ள வயதான தமிழர்கள், முகாம்களிலிருந்து வெளியேறி தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

இடம் பெயர்ந்தோர் முகாம்களில் கிட்டத்தட்ட 3 லட்சம் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை வெளியே நடமாட விடாமல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் முகாம்களில் தங்கியுள்ள முதியவர்கள் முகாம்களிலிருந்து வெளியேறி தங்களது குடும்பத்தினர், உறவினர்களுடன் சேர்ந்து கொள்ள இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.

அதன்படி தற்போது 9000 முதியவர்கள் முகாம்களை விட்டு வெளியேறவுள்ளனர். இவர்கள் அனைவருமே 60 வயதைத் தாண்டியவர்கள் ஆவர்.

இதுதொடர்பானப் பணிகள் முடிந்தவுடன் 9000 பேரும் முகாம்களை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவார்கள்.

அதேசமயம், உறவினர்களுடன் இணைய விரும்பாமல் முகாம்களிலேயே இருக்க விரும்புவோர் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+