மரக்காணம் அருகே பஸ்கள் மோதல்-5 பேர் பலி
மரக்காணம்: கிழக்குக் கடற்கரைச் சாலையில் மரக்காணம் அருகே இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கோர விபத்தில் பள்ளித் தலைமை ஆசிரியை உள்பட 5 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
மயிலாடுதுறையில் இருந்து சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. தஞ்சை திருப்புரைமையத்தை சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவர் பஸ்சை ஓட்டினார்.
இன்று அதிகாலை, 3 மணிக்கு மரக்காணம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் கூனிமேடு என்ற இடத்துக்கு அந்த பஸ் வந்தபோது திடீரென்று சாலையின் குறுக்கே முதியவர் ஒருவர் நடந்தார்.
இதையடுத்து அவர் மீது பஸ் மோதி விடாமல் தவிர்ப்பதற்காக டிரைவர் மாயகிருஷ்ணன் பஸ்சை வளைத்தார்.
அப்போது நிலை தடுமாறிய பஸ் முதியவர் மீது மோதி, எதிரே வந்து கொண்டிருந்த அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விட்டது.
வேகமாக வந்ததால் இரு பஸ்களும் மோதிய வேகத்தில் அருகில் இருந்த வயலில் விழுந்தன.
இந்த கோர விபத்தில் விபத்துக்குக் காரணமான முதியவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இவர் தவிர, ஆம்னி பேருந்தில் பயணித்த, திருத்துறைப்பூண்டியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்த எலிசபெத் பாத்திமா ராணி, டிரைவர் மாயகிருஷ்ணன், சிதம்பரம் இதாயதுல்லா, மாயவரம் அருணாச்சலம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
8 பேர் படுகாயமடைந்தனர். இவர்களில் 2 பேர் பெண்கள் ஆவர். காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவர்கள் புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மரக்காணம் தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டனர். உடல்களையும் மீட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications