அகதிகள் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உத்தரவு
சென்னை: ஈழத் தமிழ் அகதிகளின் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க தயக்கம் கூடாது. அவர்களை சேர்க்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குற்றாலிங்கம் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து ஈழ அகதிகள் மறு வாழ்வுக் கழக பொருளாளர் சந்திரஹாசன் கூறுகையில், இலங்கையில் போர் முடிந்து விட்டாலும் கூட, இடம் பெயர்ந்தோர் முகாம்களில் நிலைமை மேம்படாவிட்டால் மேலும் பலர் அகதிகளாக தமிழகம் வரக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
தற்போது 3 லட்சம் தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வெளியேற அனுமதி தரப்படாமல் உள்ளது. அவர்களை சொந்த ஊர்களில் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு இந்தியா தொடர்ந்து இலங்கையை வலியுறுத்தி வருகிறது. ஆனால் இதுவரை அதுதொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை.
இடம் பெயர்ந்தோர் முகாம்களுக்குள் சில பள்ளிகள் இருந்தாலும் கூட அது போதியதாக இல்லை. எந்தவித வசதிகளும் இல்லை. தங்களது பிள்ளைகள் முறையாக பள்ளிப் படிப்பை கற்க வேண்டும் என தமிழ் மக்கள் விரும்புகிறார்கள். இதற்காக தமிழகம் வர அவர்கள் நினைக்கலாம். எனவே தமிழகத்தில் உள்ளி பள்ளிக்கூடங்களில் அகதிகளின் பிள்ளைகளை சேர்க்க அனுமதி தர வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்தப் பின்னணியில் கடந்த 29ம் தேதியன்று குற்றாலிங்கம் கல்வித்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியு்ளார்.
அதில், இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைளை பிளஸ்டூ வரையிலான படிப்புகளில் சேர்க்கலாம். அவர்களுக்கு பிறருக்கு வழங்கப்படுவதைப் போல சீருடைகள், பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், மதிய உணவு உள்ளிட்டவை தரப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications