நன்கொடை-நாமக்கல்லில் 4 பள்ளிகள் மீது நடவடிக்கை
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மாணவர் சேர்க்கையின் போது கூடுதல் கட்டணம் வசூல் செய்த நான்கு அரசு பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் சகாயம் உத்தரவிட்டுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து உடனே விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் சகாயம் உத்தரவி்ட்டார்.
அதன்பேரில் முதன்மைக் கல்வி அலுவலர் அப்பாதுரை தலைமையிலான குழுவினர் அரசு பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
அப்போது, பள்ளி மாணவ, மாணவியரிடம் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்ட விவரங்களின்படி கொக்கராயன்பட்டை அரசு மேல் நிலைப் பள்ளி, எருமப்பட்டி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி, பரமத்தி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி, ராசிபுரம் அரசு மேல் நிலைப் பள்ளி போன்ற பள்ளிகளில் கூடுதலாக வசூலிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகைகள் உடனடியாக சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு வழங்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ராசிபுரம் பள்ளியில் இயங்கி வந்த பெற்றோர் ஆசிரியர் கழகமும் கலைக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் நடைபெறும் எனவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications