ஈவ்டீசிங்:3 மாணவர்கள் சஸ்பெண்ட்-ஒருவர் கைது
திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் ஈவ்டீசிங் செய்த பள்ளி மாணவர்கள் மூன்று பேரை பள்ளி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகள் அஞ்சுபிரியா (18). இவர் தலைக்காடு அரசு மேல்நிலப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார்.
இவர் பள்ளி செல்லும் போதும், வரும் போதும் திருத்துறைப்பூண்டி அரசு பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் வெற்றிவேல், கணேசன், ரஞ்சித் ஆகிய மூன்று பேரும் கேலி கிண்டல் செய்து வந்துள்ளனர்.
இதனால் மனம் உடைந்த அஞ்சுபிரியா இது குறித்து தனது பெற்றோரிடம் புகார் கூறியுள்ளார்.
இது குறித்து கிண்டல் செய்த மாணவர்களை அஞ்சுபிரியாவின் பெற்றோர்கள் தட்டிக் கேட்க ஆவேசம் அடைந்த வெற்றிவேல், கணேசன், ரஞ்சித் ஆகிய மூன்று பேரும் அஞ்சுபிரியா வீட்டில் புகுந்து தகராறு செய்துள்ளனர்.
இது குறித்து அஞ்சுபிரியாவின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கணேசன் என்ற மாணவனை கைது செய்தனர். மற்ற இருவரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் ஈவ் டீசிங்கில் ஈடுபட்ட அந்த மூன்று மாணவர்களையும் பள்ளி நிர்வாகம் 20 நாட்கள் சஸ்பெண்ட் செய்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications