சென்னை விமான நிலைய விபத்து-தொழிலாளி பலி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று ஏற்பட்ட விபத்து ஒன்றில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக மரணமடைந்தார். மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1808 கோடி மதிப்பில் விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்த திட்டம் வரும் 2011ம் ஆண்டு ஆகஸ்டில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தி விரிவாக்க பணிகளின் ஒரு பகுதியாக உயர் கோபுர மின்கம்பங்களில் விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை செய்யும் பொருட்டு கமலக்கண்ணன், கமல் என்னும் இரண்டு வாலிபர்கள் கிரேன் மூலம் மேலே ஏற்றப்பட்டனர்.
கிரேன் கேபிளை இடுப்பில் கட்டியவாறு அவர்களை விளக்குகளை பொருத்த முனைந்தனர். அப்போது அந்த கேபிள் எதிர்பாராத விதமாக அறுந்து விழுந்தது. இதையடுத்து அந்த இரு வாலிபர்களும் கோபுரத்திலிருந்து கீழே விழுந்தார்கள்.
இருவரும் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இதில் கமலக்கண்ணனுக்கு தலையில் பயங்கரமாக அடிப்பட்டு சம்பவ இடத்திலே இறந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த கமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து கிரேன் கேபிள் எப்படி அறுந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications