சந்தேகம்-கர்ப்பிணியை உயிரோடு கொளுத்திய கணவன்
சேலம்: நடத்தையில் சந்தேகப்பட்டு கர்ப்பிணி மனைவியை உயிரோடு கொளுத்திய மகாராஷ்டிரா வாலிபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (26). இவரது மனைவி வித்யா (21). இவர்கள் சேலம் செவ்வாய்ப்பேட்டை மசூதி தெருவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
சந்தோஷ் வெள்ளிப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு கடந்த 2007ல் திருமணம் நடந்தது. தற்போது வித்யா நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.
மனைவி வித்யாவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட சந்தோஷ் அவரை அடிக்கடி அடித்தும் உதைத்தும் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகின்றது. இதனால் இவர்கள் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை எழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்றும் இதே போல் மனைவியுடன் சந்தோஷ் சண்டை போட்டுள்ளார். பின்னர் ஆத்திரமடைந்த சந்தோஷ், தூங்கிக் கொண்டிருந்த வித்யா மீது அதிகாலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அலறித் துடித்த வித்யாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில்சேர்த்தனர். அங்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து செவ்வாய்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய சந்தோசை தேடி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications