காந்தி, இந்திரா, ராஜீவ் என 3 காந்திகளைக் கொடுத்துதான் வென்றோம் - காங். எம்.எல்.ஏ
சென்னை: எதிர்க்கட்சிகள் சொல்வதைப் போல நாங்கள் காந்தியைக் கொடுத்துதான் வென்றோம். ஆனால் அவர்கள் நினைக்கும் காந்தி அல்ல. இந்திரா மற்றும் ராஜீவ் ஆகியோரை நாட்டுக்காக தியாகம் செய்தவர்கள் நாங்கள் என்று கூறி சட்டசபையில் சலசலப்பை ஏற்படுத்தினார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தண்டபாணி.
நேற்று சட்டசபையில் காங்கிரஸ் எம்எல்ஏ தண்டபாணி பேசுகையில், எதிர்க்கட்சிகள், நாங்கள் 'காந்தியை' (ரூபாய்) காட்டியும், 'காந்தியை' கொடுத்தும் தேர்தலில் வெற்றி பெற்றோம் என்கிறார்கள். அது உண்மைதான் என்று கூறி நிறுத்தினார்.
இதனால் சட்டசபையில் சலசலப்பு ஏற்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் உறுப்பினர்கள் குழப்பமடைந்தனர்.
தொடர்ந்து பேசிய தண்டபாணி, 1948-ல் காந்தியை பலி கொடுத்தோம். அதன்பிறகு இந்திரா காந்தி, ராஜீவ் காந்தியை பலி கொடுத்தோம். ஆகவே, காந்தியை கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற்றோம்.
சிறப்பான ஆட்சி அமைய, சோனியா தலைமையிலான அணிக்கு வாக்களியுங்கள் என்று சோனியா காந்தியைக் காட்டித்தான் வாக்கு கேட்டோம். ராகுல் காந்தி, குடிசைகளில் தூங்கி எளிய முறையில் பிரசாரம் செய்தார். அந்த காந்தியையும் காட்டி வாக்கு கேட்டோம். எனவே, எதிர்க்கட்சிகள் சொல்வது உண்மைதான் என்று கூறி நிறுத்திய பின்னரே காங்கிரஸார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
தண்டபாணியின் தடாலடி அத்துடன் நிற்கவில்லை. அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து முதல் அமைச்சர் என்று கூறி திமுகவினரை திகிலடைய வைத்தார். பின்னர் அவரே அதற்குரிய விளக்கத்தையும் கொடுத்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து முதல் முறையாக அமைச்சராக ஆகியிருப்பதால்தான் அவரை 'முதல்' அமைச்சர் என குறிப்பிட்டேன் என்று கூறவே தண்டபாணியால் ஏற்பட்ட சலசலப்பு அடங்கியது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications