முல்லை பெரியாறு-பிரதமரை சந்திக்க டெல்லி போகிறார் அச்சுதானந்தன்
திருவனந்தபுரம்: முல்லைபெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் விரைவில் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசவிருக்கிறார்.
தமிழக கேரள, எல்லையில் இருக்கும் முல்லை பெரியாறு அணையின் தற்போதைய உயரம் 136 அடி. இதை மேலும் 6 அடி உயர்த்தினால் தமிழகத்துக்கு கூடுதல் நீர் கிடைக்கும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு அதற்கான திட்டத்தை செயல்படுத்த முயற்சித்து வருகிறது.
ஆனால், 112 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான இந்த அணை ஏற்கனவே பலவீனமாக இருக்கிறது. இதை மேலும் சில அடிகள் உயர்த்தினால் அணை உடைத்து பெரும் சேதம் ஏற்படும் என கேரளா எதிர் மாறான செய்திகளை பரப்பி வருகிறது.
இந்நிலையில் கேரள நீர்வளத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
முல்லைபெரியாறு அணை விஷயமாக பிரதமரை சந்திக்க முதல்வர் அச்சுதானந்தன் டெல்லி செல்ல இருக்கிறார். அவர் விரைவில் டெல்லி செல்வார் என தெரிகிறது. ஆனால், எந்த தேதியில் கிளம்புகிறார், அவர் எப்போது பிரதமரை பார்ப்பார் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
சமீபத்தில் முதல்வர் அச்சுதானந்தன், நீர்வளத்துறை அமைச்சர் பிரேம்சந்திரன் மற்றும் சில நிபுணர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டது என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications