ஊராட்சித் தேர்தலில் இடதுசாரிகளுக்கு அடி - காங்.திரினமூல் கூட்டணி அபார வெற்றி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் இடதுசாரிகளுக்கு பெரும் அடி விழுந்துள்ளது. 16 நகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் 13 நகராட்சிகளை காங்கிரஸ் - திரினமூல் காங்கிரஸ் கூட்டணி வென்றது.
மேற்கு வங்கத்தி்ல் உள்ள 16 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 13 இடங்களை காங்கிரஸ், திரினமூல் காங்கிரஸ் வென்றுள்ளது. வெறும் 3 இடங்களை மட்டுமே இடதுசாரிகள் கைப்பற்றியுள்ளன. முன்பு மொத்தம் 10 இடங்களை இடதுசாரிகள் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு மொத்தம் 15 மாநகராட்சிகள் இருந்தன. சமீபத்தில் புதிதாக டாங்குனி மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
காங்கிரஸ் கூட்டணி வென்ற இடங்களில் ஒன்றான அசன்சோல் மாநகராட்சி, இடதுசாரிகளின் கோட்டையாகும். ஆனால் இங்கு காங்கிரஸ் கூட்டணி வென்று விட்டது.
இதேபோல சில கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு நடந்த இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி மக்கள் பெற்ற வெற்றியாகும் என்று கருத்து தெரிவித்துள்ள திரினமூல் தலைவர் மமதா பானர்ஜி, இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கும் இடதுசாரி கூட்டணி அரசு, உடனடியாக பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications