மிரட்டிய அமைச்சர்-'நீதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும்'
விழுப்புரம்: தொலைபேசியில் அழைத்து தன்னை நிர்ப்பந்தப்படுத்திய மத்திய அமைச்சர் யார் என்பதை நீதிபதியே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
தைலாபுரம் தோட்டத்தில் இன்று நிருபர்களிடம் பேசிய அவர்,
இலங்கை அதிபர் ராஜபக்சே நடத்திய இனப்படுகொலை குறித்து எங்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி சட்டசபையில் விரிவாக எடுத்துரைத்துள்ளார்.
ஆனால், முதல்வர் கருணாநிதியோ இலங்கை தமிழர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பது உண்மை என்றாலும் அதற்காக சிங்களர்களின் கோபத்தை அதிகப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று பேசியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
சுயநிதி கல்லூரிகளில் கட்டணக் கொள்ளை கொடி கட்டிப் பறக்கிறது. இதைத் தடுக்க சட்டம் கொண்டு வருவோம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. ஆனால், இதில் தமிழக அரசு கண் துடைப்பு நாடகம் தான் நடத்தி வருகிறது.
கட்டாய நன்கொடை, கட்டணக் கொள்ளை போன்றவற்றை தடுப்பதற்கு சிறந்த வழி சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்துவதுதான். சமூகத்தில் அனைத்துத் தரப்பினருக்கும் தரமான, சீரான கல்வியை வழங்குவதுதான் இந்த கல்விமுறை. சமூகநீதியின் முதல் படியும் சமச்சீர் கல்விதான்.
வழக்கில் சிக்கிய இருவருக்கு முன்ஜாமீன் வழங்க சொல்லி மத்திய அமைச்சர் ஒருவர் நெருக்கடி கொடுத்ததாக உயர்நீதிமன்ற நீதிபதி ரகுபதி பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அமைச்சரின் செயல் நீதித்துறையில் அப்பட்டமான குறுக்கீடு, அதிகார துஷ்பிரயோகம். நீதிபதியை தொலைபேசியில் அழைத்து நிர்ப்பந்தப்படுத்திய மத்திய அமைச்சர் யார் என நீதிபதியே பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையில்லை. 10ம் வகுப்புக்கு மேல் படிக்க விரும்பாமல் பாலிடெக்னிக் போன்ற தொழில் கல்வி படிப்பவர்களுக்கு 10ம் வகுப்பு தேவை. 10ம் வகுப்பு தேர்வை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பத்திற்கு விட வேண்டும் என்றார் ராமதாஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications