ஈரானை அச்சுறுத்த பொய் சொன்ன சதாம்-எப்.பி.ஐ

சதாம் உசேன் பிடிபட்ட பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது இது தெரிய வந்ததாக எப்பிஐ தெரிவித்துள்ளது. 2004ம் ஆண்டு ஜூன் மாதம் சதாம் உசேனிடம் நடந்த விசாரணையின்போது இந்தத் தகவல்களை சதாம் தெரிவித்தாராம்.
இந்தத் தகவல்கள் இதுவரை ரகசிய ஆவணமாக வைக்கப்பட்டிருந்தது. தற்போது இவற்றை எப்பிஐ வெளியிட்டுள்ளது.
எதிரிகளின் கண்ணில் ஈராக் பலவீனமான நாடாக பார்க்கப்படக் கூடாது என்று விரும்பினார் சதாம். குறிப்பாக ஈரான் தன்னைப் பார்த்து பயப்பட வேண்டும் என விரும்பினார்.
இதனால்தான் ஈராக்கிடம் நாசகார ஆயுதங்கள் இருப்பது போல அவர் காட்டிக் கொண்டார். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இல்லை என்று சதாம் தெரிவித்தார்.
ஈராக்கின் பலவீனங்களை ஈரான் கண்டுபிடித்து வருவதாக உணர்ந்த சதாம், அதிலிருந்து ஈராக்கைக் காத்துக் கொள்ள பெருமளவில் ஆயுதங்கள் இருப்பது போல காட்டிக் கொண்டதாக விசாரணையில் தெரிவித்தாராம் சதாம்.
அமெரிக்காவை விட ஈரான்தான் தனது முதன்மையான எதிரி என்று சதாம் நினைத்தார்.
ஆயுதங்கள் இருக்கிறதா என்பதைப் பார்வையிட ஐ.நா. குழுக்கள் வருகை தர முயன்றபோதெல்லாம் அவர் தடுத்ததற்கும் இதுவே காரணம். எங்கே குட்டு உடைந்து விடுமோ என்ற பயத்தில்தான் அவர் எந்தக் குழுவையும் ஈராக்குக்குள் அனுமதிக்காமல் இருந்து வந்தார் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரானுக்கும், ஈராக்குக்கும் 1980ம் ஆண்டு போர் வெடித்தது. 1988ம் ஆண்டு வரை அது நீடித்தது. அந்த சமயத்தில் ஈராக் ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
2003ம் ஆண்டு ஈராக் மீது ஜார்ஜ் புஷ் போர் தொடுத்தார். மக்களைக் கொல்லும் நாசகார ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பதாக கூறித்தான் இந்த போர் தொடுக்கப்பட்டது. ஆனால் இன்று வரை ஒரு ஆயுதம் கூட கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சதாம் உசேன் பிடிக்கப்பட்டு அமெரிக்காவின் பாதுகாப்பில் இருந்தபோது அவரிடம் 20 முறை எப்பிஐ ஏஜென்டுகள் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் ஐந்து முறை சாதாரண முறையில் அவரிடம் பேசியுள்ளனர்.
சதாமை விலை மதிக்கத்தக்க கைதி நம்பர் 1 என்று பெயரிட்டுள்ளனர் அமெரிக்க அதிகாரிகள்.
பின்லேடனுடன் தொடர்பில்லை..
இந்த விசாரணையின்போது இன்னொரு முக்கிய மான விஷயமும் அமெரிக்கர்களுக்குத் தெரிய வந்ததாம். அல் கொய்தா தலைவர் பின்லேடனுக்கும், தனக்கும் இடையே எந்தத் தொடர்பும் இல்லை என்று சதாம் உசேன் திட்டவட்டமாக தெரிவித்தாராம்.
மேலும், வட கொரியாதான் தனது மிக நெருங்கிய தோழன் என்றும் சதாம் கூறியுள்ளார்.
1991 பெர்சிய வளைகுடாப் போரின்போது, இஸ்ரேலிய நிலைகளை நோக்கி ஸ்கட் ஏவுகணைகளை வீசுமாறு தான்தான் உத்தரவிட்டதாகவும் சதாம் தெரிவித்தாராம். அரபு மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் இஸ்ரேல்தான் என்று தான் நினைத்ததால் இவ்வாறு உத்தரவிட்டதாக சதாம் கூறினாராம்.
மேலும் 1990ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சதாம் தொலைபேசியை பயன்படுத்தியதே இல்லையாம். ஆட்கள் மூலம்தான் தகவல்களை சொல்லி அனுப்புவாராம், பெறுவாராம்.
2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார் என்பது நினைவிருக்கலாம்.
-
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications