பொருளாதார மண்டலம் அமைக்க சீனாவுக்கு இடம் தரும் இலங்கை
கொழும்பு: சீனாவுக்காக சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க தனி இடத்தை ஒதுக்கியுள்ளது இலங்கை.
இலங்கையில், வெளிநாடு ஒன்றுக்கு இவ்வளவு பெரிய தனி இடம் ஒதுக்கப்படுவது இதுவே முதல் முறையாம்.
சமீபத்தில் முடிந்த விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கை வெல்ல சீனா பெருமளவில் உறுதுணையாக இருந்தது. இதற்குப் பரிசளிப்பது போல இந்த பொருளாதார மண்டலத்தை அளிக்கிறது இலங்கை.
கொழும்பிலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மிரிகாமா என்ற இடத்தில் இந்த பொருளாதார மண்டலம் அமையவுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஹுய்சென் இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம் இங்கு கிளை பரப்பவுள்ளது. 33 ஆண்டுகள் குத்தகையாக இந்த நிலம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஹூய்சென் நிறுவனம் சாலைகள் அமைப்பது, மின்சார வசதி, கழிவு நீர் வசதி ஆகியவற்றை இந்த மண்டலத்தில் செய்ய 28 மில்லியன் டாலர்களை செலவிடவுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் இந்தப் பணிகள் முடிவடையும்.
தமிழர் பகுதிகளிலும் பொருளாதார மண்டலங்கள்..
இதேபோல போரினால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ள திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாரை, கிளிநொச்சி ஆகிய இடங்களிலும் இதேபோன்ற பொருளாதார மண்டலங்கள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications