தனது முதல் மாத சம்பளத்தை ஏழைகளுக்கு அளித்த அழகிரி
மதுரை: மத்திய அமைச்சர் பதவிக்கான தனது முதல் மாத சம்பளமான 76 ஆயிரத்து 404 ரூபாயை மதுரை லோக்சபா தொகுதிக்குட்பட்ட ஏழை மக்களின் நலனுக்காக வழங்கியுள்ளார் மத்திய உரத்துறை அமைச்சர் மு.க.அழகிரி.
தன்னை முதல் முறையாக லோக்சபாவுக்கு அனுப்பி வைத்த மதுரை மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வாறு அழகிரி வழங்கியுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் மதிவாணன் கூறுகையில், மாவட்ட ஆட்சித் தலைவர் நிதிக்கு தனது முதல் மாத சம்பளத்தை வழங்கியுள்ளார் அமைச்சர் மு.க.அழகிரி.
இந்தப் பணத்தை ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பயன்படுத்துமாறும் அவர் கோரியுள்ளார். எனவே இந்தப் பணம் முழுவதும் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக செலவிடப்படும் என்றார் அவர்.
நிழல் அரசியல்வாதியாகவே இருந்து வந்த மு.க.அழகிரி கடந்த லோக்சபா தேர்தலில் முதல் முறையாக மதுரையிலிருந்து போட்டியிட்டு தேர்தல் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார். இதில் அவர் 1.40 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
எம்.பியானதோடு மத்திய அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள அழகிரி மக்களைக் கவரும் வகையில் செயல்பட்டு வருகிறார். தன்னை உயர்த்திய மதுரை தொகுதியை உயர்த்தும் வகையிலும் அவர் செயல்பட்டு வருகிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications