பெரியாறு அணை: முதல்வர்கள் மட்டத்தில் பேசி தீர்வு காண அச்சுதானந்தன் வலியுறுத்தல்
டெல்லி: தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சுவார்த்தை நடத்தி முல்லைப் பெரியாறு அணைக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம், கேரள முதல்வர் அச்சுதானந்தன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளா தேவையில்லாமல் முரண்டு பிடித்து வருகிறது. அணை நன்றாக உள்ள நிலையிலும், அது இடியப் போகிறது, லட்சக்கணக்கான உயிர்கள் பலியாகப் போகின்றன என்று தேவையில்லாமல் மக்களிடையே பீதியைக் கிளப்பி வருகிறார்கள்.
அங்கு புதிய அணை கட்ட முஸ்தீபுகளில் இறங்கியுள்ளது கேரளா. இந்த நிலையில், முதல்வர் அச்சுதானந்தன் நேற்று டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். அப்போது புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி தர வேண்டும் என்று அவர் முறைப்படி கோரிக்கை வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அச்சுதானந்தன் பேசுகையில், முல்லைப் பெரியாறு அணையை மூடி வி்ட்டு புதிய அணை கட்ட அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளேன். அதைப் பரிசீலிப்பதாக பிரதமர் உறுதியளித்துள்ளார். இருப்பினும் இதுகுறித்து முதல்வர் கருணாநிதி சொல்லப் போகும் வார்த்தையில்தான் எல்லாமே உள்ளது.
தற்போது உள்ள அணை மிகவும் பழமையாகி விட்டது. அபாயகரமான நிலையில் உள்ளது. மக்களிடையே பீதியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் கேரளாவின் இந்தக் கவலை குறித்து தமிழக அரசு கொஞ்சம் கூட கவலைப்படாமல் இருப்பதுதான் வேதனையைத் தருகிறது.
சமீப காலமாக அணையில் நிறைய விரிசல்கள் ஏற்பட்டன. நீர்க் கசிவும் அதிக அளவில் உள்ளது. மேலும் அணை உள்ள பகுதி நில நடுக்கத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதியில் அமைந்துள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஐஐடி நிபுணர்களே இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரு மாநில முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்டி இதுகுறித்தெல்லாம் பேசி விவாதித்து சுமூக முடிவை எடுக்க பிரதமர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார் அச்சுதானந்தன்.
எம்.பிக்களுக்கு புக் கொடுக்கும் கேரளா...
இதற்கிடையே, புதிய முல்லைப் பெரியாறு அணை ஏன் தேவை என்பதை விளக்கி புத்தகமாக்கி அதை கேரளாவைச் சேர்ந்த எம்.பிக்களுக்கு வழங்கவுள்ளதாம் கேரள அரசு. இதை வைத்து நாடாளுமன்றத்தில் பிரச்சினை எழுப்புமாறும் அது கோரியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications