அருணா கொலை-முக்கிய நபரை ஆஜர்படுத்த உத்தரவு!
மதுரை: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட முக்கிய நபரை ஜூலை 9 ம் தேதி ஆஜர்படுத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆலடி அருணா கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது நண்பர் பொன்ராஜூடன் வாக்கிங் சென்றபோது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ராஜாஸ் கல்வி நிலையங்களின் தலைவர் எஸ்.ஏ. ராஜா உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி செஷன்ஸ் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில் அழகர், பாலா ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், வேல்துரைக்கு மூன்று ஆண்டு சிறையும் விதிக்கப்பட்டது. எஸ். ஏ. ராஜா, கண்ணன் உட்பட 6 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
தூக்கு தண்டனையை எதிர்த்து அழகர், ராஜா இருவரும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்துள்ளனர். அதே போல 6 பேரின் விடுதலையை எதிர்த்து அரசு தரப்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் நீதிபதி பானுமதி, நீதிபதி மாலா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கண்ணன் வக்கீல் வைத்து கொள்ளவில்லை. ஆனால், மற்றவர்கள் தவிர அனைவருக்கும் வக்கீல்கள் ஆஜராயினர்.
இதனால் கண்ணனை ஜூலை 9ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதிகள் நெல்லை போலீசாருக்கு உத்தரவிட்டனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications