9ம் தேதி முதல் பால் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்!

இது குறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் தலைவர் செங்கோட்டுவேல் கூறுகையில்,
தமிழகத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பால் உற்பத்தி செய்து வருகிறார்கள். தினமும் ஒரு கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
இப்போது கலப்புத் தீவன விலையேற்றம் 60 சதவீதம் உயர்ந்துள்ளது. தவிடு மற்றும் புண்ணாக்கு விலையும் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் பால் உற்பத்திச் செலவு பல மடங்கு அதிகரித்துவிட்டது.
இதனால் எங்களிடம் அரசு வாங்கும் பாலின் விலையை உயர்த்த வேண்டும். இப்போது பசும்பால் லிட்டருக்கு ரூ.13.50க்கும், எருமைப் பால் லிட்டருக்கு ரூ.18.50க்கும் அரசால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு 20 ரூபாயாகவும், எருமைப் பாலுக்கு லிட்டருக்கு 30 ரூபாயாகவும் உயர்த்த வேண்டும்.
ஆவின் நிறுவனம் மூலம் தினமும் 25 லட்சம் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் மட்டும் தினமும் 10 லட்சம் லிட்டர் பால் பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது. தற்போது பால் உற்பத்தியால் 1 லிட்டருக்கு ரூ. 8 இழப்பு ஏற்படுகிறது.
தமிழகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு இணையத்தின் கீழ் மாவட்ட கூட்டுறவு ஒன்றியம், கிராமங்களில் உற்பத்தியாளர் சங்கம் ஆகியவை இயங்கி வருகி்ன்றன.
கிராம உற்பத்தியாளர் சங்கங்களில் 25,000 பேர் வேலை பார்க்கின்றனர். இந்த சங்கங்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். பணியாளர்களுக்கு பணியை வரமுறைப்படுத்தி ஊதியம் நிர்ணயிக்க வேண்டும்.
எங்களது இந்த கோரிக்கைகளை நீண்டகாலமாகவே அரசிடம் வைத்துள்ளோம். நிறைவேற்றித் தருவதாக அரசும் கூறியது. ஆனால், இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இனியும் தாமதித்தால் பால் உற்பத்தியாளர்கள் நிலைமை மிகவும் மோசமாகிவிடும்.
எங்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக்கோரி வரும் 9ம் தேதி முதல் காலவரையற்ற பால் உற்பத்தி நிறுத்த போராட்டம், கால்நடைகளுடன் சாலை மறியல் போராட்டம் ஆகியவற்றை தமிழகம் முழுவதும் நடத்தவுள்ளோம். அன்று காலை முதல் பால் வழங்குவதை நிறுத்துவோம் என்றார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications