4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆயத்தப் பணிகளை தொடங்கியது ஆணையம்
கோவை: தொண்டாமுத்தூர், இளையாங்குடி, பர்கூர், கம்பம் ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் தொடர்பான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இந்த நான்கு தொகுதிகளின் உறுப்பினர்களும் ராஜினாமா செய்து விட்டு திமுக, அதிமுக என மாறி மாறிப் போய்ச் சேர்ந்து வி்ட்டனர். இதையடுத்து அங்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
இதுதொடர்பான பூர்வாங்கப் பணிகளில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, தொண்டாமுத்தூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலெக்டர் உமாநாத், இணை தலைமை தேர்தல் அதிகாரி ஜெயஸ்ரீ, மாவட்ட வருவாய் அலுவலர் மூர்த்தி, ஆர்.டி.ஓ.க்கள் பாலசந்திரன், அன்பழகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நரேஷ்குப்தா பேசுகையில்,
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தயார் செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் இடைத் தேர்தலுக்கான ஆயத்த பணிகள் பற்றி விவாதிக்கப்பட்டன.
தொண்டாமுத்தூர் தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரத்து 240. இதில் ஆண்கள் 1 லட்சத்து 73 ஆயிரத்து 270. பெண்கள் 1 லட்சத்து 67 ஆயிரத்து 970.
கோவை மாவட்டத்தில் ஏராளமான குடும்ப அட்டைகள் போலியானது என தெரியவந்துள்ளது. வாக்குப்பதிவின் போது குடும்ப அட்டையை பயன்படுத்தக் கூடாது என்று தேர்தல் ஆணையம் கூறிய கருத்துக்கு இது வலு சேர்ப்பதாக உள்ளது.
தொண்டாமுத்தூர், இளையான்குடி, கம்பம், பர்கூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம்தான் அறிவிக்கும் என்றார் குப்தா.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications