இது கோயில்களை மூட முதல்படி: ராம. கோபாலன்
சென்னை: கோயில் நிலங்களை அரசின் பிற துறைகளுக்கு விற்கும் செயல் கோயில்களை இழுத்து மூடுவதற்கு முதல்படி என்று இந்து முன்னணித் தலைவர் ராம. கோபாலன் கூறியுள்ளார்.
பயன்படாத கோயில் நிலங்களை அரசின் பிற துறைகளுக்கு விற்க முடிவு செய்துள்ளதாக சட்டசபையில் அறநிலையத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
இது குறித்து ராம. கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்து அறநிலையத்துறைக்குப் பயன்படாத கோயில் நிலங்களை அரசின் பிற துறைகள் சந்தை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என அமைச்சர் பெரிய கருப்பன் சட்டப் பேரவையில் அறிவித்துள்ளார்.
இது கோயில்களை இழுத்து மூடுவதற்கு முதல்படி. எனவே இந்த முயற்சியை இந்து அறநிலையத்துறையும், தமிழக அரசும் கைவிட வேண்டும். இது தொடர்ந்தால் பக்தர்களை திரட்டி இந்து முன்னணி போராட்டத்தில் ஈடுபடும் என்று கூறியுள்ளார்.
வேதாரண்யம் கோயிலில் கொள்ளை:
நாகப்பட்டிணம் மாவட்டம் வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயிலில் உண்டியலை உடைத்து, நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இந்தக் கோயிலில் அன்னதானம் செய்வதற்கான உண்டியல் உள்பட நேர்த்திக் காணிக்கை செலுத்தும் 7 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் 6 மாதங்களுக்கு ஒரு முறை திறக்கப்படும்.
இந் நிலையில் நேற்று அதிகாலை கோவில் திறக்கப்பட்டபோது துர்க்கை அம்மன் சன்னதியிலிருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதில் நாணயங்கள் மட்டுமே மீதம் இருந்தன.
தங்கம், வெள்ளி நகைகள், ரூபாய் நோட்டுகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications