மே 18-ம் தேதி நடந்தது என்ன? – எல்டிடி போராளியின் புதிய தகவல்

Subscribe to Oneindia Tamil

வன்னி: வன்னிக் காட்டில் மே 18ம் தேதி என்ன நடந்தது என்பது குறித்து அந்தப் போரில் தப்பிப் பிழைத்த ஒரு விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளி தெரிவித்துள்ளார்.

இதை ஈழமுரசு இதழ் வெளியிட்டுள்ளது. இதில் பிரபாகரன் குறித்தும் அந்தப் போராளி சில புதிய தகவல்களை அளித்துள்ளார்.

இதுகுறித்து ஈழ முரசு கூறுவதாவது..

எங்களுக்கு கிடைத்த நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில், மக்கள் அறிந்த போராளி ஒருவர் ஊடாக இந்தத் தகவல்களைப் பெற்றுள்ளோம். அதை இங்கே தருகிறோம்..

பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையா? என்ற பெரும் வாதப் பிரதிவாதங்கள் இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இருக்கின்றார் என நம்பும் ஒரு பகுதியினரும் இல்லை என மறுத்து அறிக்கை விடும் கூட்டத்தினருக்கும் மத்தியில் தலைவர் தொடர்பான உண்மைத் தகவல்களையும், களமுனையில் இறுதியாக என்ன நடந்தது என்பது பற்றியும் அறிந்துகொள்வதற்கு ஈழமுரசு கடந்த பல நாட்களாக எடுத்த பல்வேறு முயற்சிகளின் வெற்றியாக களமுனையில் இருந்து நம்பகத் தகுந்த பல தகவல்களைப் பெற்றுள்ளோம்.

களமுனையில் கடந்த 18.05.2009 அன்றுவரை போராடிக்கொண்டிருந்த போராளி ஒருவருடன் ஈழமுரசு அண்மையில் தொடர்புகளை ஏற்படுத்தி நடந்த சம்பவங்களை அறிந்துகொண்டுள்ளது.

அந்தத் தகவல்களை வழங்கிய 'மக்கள் அறிந்த அந்தப் போராளியை' தற்போதையை சூழ்நிலையில் எம்மால் இனம் காட்டிக் கொள்ள முடியாவிட்டாலும், கால ஓட்டத்தில் ஒருநாள் அவரை அடையாளம் காட்டமுடியும் என்றே நம்புகின்றோம்.

இலங்கை ராணுவத்தினரால் வெளியிடப்பட்ட எந்த நிழற்படங்களையும் இதுவரையும் அவர் பார்த்திராத போதும், தலைவரை இறுதியாக தான் கண்டபோது இருந்த அவரது தோற்றம் தொடர்பாக, அந்தப் போராளி வழங்கிய தகவல்கள் தலைவர் எனக்கூறி இலங்கை வெளியிட்ட நிழற்படங்கள் போலித்தனமானவை என்பதை அப்பட்டமாகப் புரியவைத்தன.

அவருடனான எமது உரையாடிலின்போது பகிர்ந்துகொண்ட விஷயங்களை இங்கே தொகுத்து தருகின்றோம்...

மே மாதம் 4ம் தேதி அல்லது 5ம் தேதியா என்பது சரியாக நினைவில் இல்லை. இந்த இரண்டு தினங்களில் ஒன்றில்தான் தலைவரை இறுதியாக நான் சந்தித்திருந்தேன். அன்றைய தினம் தலைவருடன் ஒரு சந்திப்பு நடைபெற்றது. உண்டியலடிக்கு வருமாறு வந்த அழைப்பை அடுத்து போராளிகள் அங்கு சென்றிருந்தோம். அப்போது அங்கு சுமார் ஒன்பது வரையான வாகனங்களில் ஒரு அணியொன்று வந்து சேர்ந்தது.

ஒரு வாகனத்தில் தலைவரும் பொட்டம்மானும், மற்றவற்றில் அவர்களது மெய்ப் பாதுகாவலர்களும் இருந்தனர். தலைவர் தலைக் கவசம் (ஹெல்மட்) அணிந்திருந்தார்.

வழக்கம் போலவே போராளிகளுடன் உரையாடியவர், தாக்குதலுக்கான திட்டங்களையும் வழங்கினார். அப்போது தலைவர் முழுமையாக முகச் சவரம் செய்திருந்தார். அவரது மீசை கூட மழிக்கப்பட்டிருந்ததை என்னால் உறுதியாகக் கூறமுடியும்.

ஆனால், நீங்கள் சொல்லவதுபோல் இலங்கை ராணுவத்தினரால் வெளியிடப்பட்ட படத்தில் அடர்த்தியாக மீசை உள்ள தலைவரின் உருவம் வந்திருக்க வாய்ப்பில்லை. பத்து, பன்னிரண்டு நாட்களில் அவ்வளவிற்கு மீசை வளர்ந்திருக்கும் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. அத்துடன், அன்றைய சந்திப்பின் பின்னர் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி தலைவர் அந்த முற்றுகைப் பகுதியில் இருந்து வெளியேறி விட்டார்.

சுமார் 45 முதல் 50 வரையான கரும்புலித் தாக்குதல்கள் நடத்தப்பட்டே படையினரின் முற்றுகைகள் உடைக்கப்பட்டு நந்திக்கடல் வழியாக இந்த வெளியேற்றம் நிகழ்ந்ததாகவும், அந்த சண்டையில் ஆயிரம் ராணுவத்தினர் கொல்லப்பட்டிருந்ததாகவும் களமுனையில் போராளிகளிடையே பரவலாக செய்திகள் இருந்தன.

தலைவர் இறுதி வரையும் நின்று போராடப் போவதாகவே கூறிக் கொண்டிருந்தார். ஆனால், போராளிகளும் தளபதிகளும் அவரை அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றே வலியுறுத்தி கேட்டு வந்தனர். ஒரு கட்டத்தில் தலைவர் வரவிட்டால் மயக்க மருந்து செலுத்தித்தான் கொண்டுபோவோம் என்று சொல்கின்ற அளவிற்கு நிலைமை இருந்தது.

இதேவேளையில், சண்டை மிகவும் இறுக்கமடைந்திருந்த நிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து இரண்டு அணிகளுடன் வரவுள்ளதாக தலைவருக்கு தளபதி ஒருவரிடம் இருந்து தகவல் அனுப்பப்பட்டிருந்தது.

ஆனால், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த தலைவர், அணிகளைச் சிதைக்காமல் அந்ததந்த இடங்களிலேயே தக்க வைத்துக் கொண்டிருக்குமாறு பணித்திருந்தார்.

போர்க்களத்தில் சார்லஸ் அந்தோணியும், துவாரகாவும்..

தலைவர் அங்கிருந்து வெளியேறியிருந்தபோதும், தம்பிதான் (பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி) இறுதிவரை எங்களுடன் களமுனையில் நின்றிருந்தார்.

அவரது மகள் துவாரகாவும் கையில் காயமடைந்த நிலையிலும் களமுனையில் போரிட்டுக் கொண்டிருந்தார் என்பதை அறிய முடிந்தது.

ஆனந்தபுரம் தாக்குதலில் தீபனும், கடாபியும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இறுதிப் போரின்போது காயமடைந்த சொர்ணமும் சயனை சாப்பிட்டு உயிர் நீத்தார்.

ஜெயமும், சூசையும் களமுனையில் இருந்து போராளிகளை பெரும் கடல் வழியாக படகுகளில் வெளியேற்றிக் கொண்டிருந்தனர். ஜெயம் அரைக் காற்சட்டையுடன் கடற்கரையில் நின்று பணிகளில் ஈடுபட்டதை காண முடிந்தது.

பிரபாகரன் வெளியேறிச் செல்வதற்கு வசதியாக அவர்கள் படையணிகளை முன்னதாகவே வேறு பகுதிகளில் கடலால் கொண்டு சென்று தரையிறக்கி வழியமைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறியமுடிந்த போதும், அவர்கள் எங்கே தரையிறக்கப்படுகின்றார்கள் என்பதை என்னால் அறியமுடியவில்லை.

எனினும், கொக்குத்தொடுவாய் பக்கமே அவர்கள் சென்று தரையிறங்கியிருக்க வேண்டும். பின்னர் ஜெயமும் அங்கிருந்து வெளியேறிவிட்டதாக என்னால் அறியமுடிந்தது.

பானு அவர்களும் களமுனையில் நின்றிருந்தார். எனினும், அவர் கையில் காயமடைந்திருந்ததால் அதற்கான சிகிச்சையைப் பெற்றுக்கொண்டிருந்தார்.

இறுதியாக, 15ம் தேதி முள்ளிவாய்க்காலில் இருக்கும் விடுதலைப் புலிகளின் அனைத்து ஆவணங்களையும், கம்ப்யூட்டர்களையும் அழித்துவிடுமாறு எங்களுக்கு தகவல் வந்தது.

குறிப்பாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் தொடர்பான ஆவணங்களை முற்றாக அழிக்குமாறு தலைவர் அந்தச் சந்திப்பின்போது வலியுறுத்தியிருந்தார்.

இதனால், ராணுவத்தினர் எப்போதும் முள்ளிவாய்காலில் நுழையலாம் என்ற நிலையில், இருக்கின்ற அனைத்துப் பொருட்களையும் கொண்டுபோய் ஒரு இடத்தில் குவித்து வைத்து தீ வைத்தோம். பெரும் பிரதேசத்தில் அந்தத் தீ கொளுந்துவிட்டு எரிந்தது.

அப்போது ராணுவத்தினர் எமக்கு மிக அருகில் நெருங்கியிருந்தனர். இந்நிலையில், வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்த இன்னொரு ஆவணத் தொகுதியையும் அழிக்கவேண்டியிருந்தது. அந்த வாகனத்தில் ஏற்றப்பட்ட ஆவணங்களுக்கு தீ வைத்துவிட்டு திரும்பியபோது, ராணுவத்தினர் ஏற்கனவே தீ வைக்கப்பட்டு எரிந்த பகுதிக்குள் நுழைந்துவிட்டிருந்தனர். இறுதியாகவே நான் அங்கிருந்து வெளியேறினேன் என்று அந்தப் போராளி கூறியுள்ளார்.

அந்தப் போராளி யார் என்பதை ஈழ முரசு தெரிவிக்கவில்லை. பின்னர் தெரிவிப்பதாக கூறியுள்ளது. இருப்பினும் அனைவரும் அறிந்த போராளி என ஈழ முரசு கூறியுள்ளதால், புலிகள் இயக்கத்தின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவராக அவர் இருக்கக் கூடும் எனத் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+