செங்கோட்டை-புனலூர் அகலப் பாதைப் பணி விரைவில் தொடக்கம்
நெல்லை: செங்கோட்டை- புனலூர் இடையிலான அகலப் பாதை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை-மதுரை இடையே இருவழிபாதை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதையடுத்து செங்கோட்டை-புனலூர் அகல ரயில் பாதை விரைவில் ஆரம்பமாகிறது என்று தலைமை நிர்வாக அதிகாரி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
நெல்லை-தென்காசி அகல ரயில் பாதை பணிகள் மற்றும் நெல்லை ரயில்வே ஸ்டேஷனில் 8 கோடியில் மூன்று பீட் லைன் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்ய தென்னக ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை நிர்வாக அதிகாரி ராமநாதன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, நெல்லை-தென்காசி அகல ரயில் பாதை பணிகள் 200 கோடியில் நடந்து வருகிறது. இதில் சேரன்மகாதேவி, கீழ் கடையம், அம்பை, பாவூர்சத்திரம் ஆகிய ரயில்வே ஸ்டேஷன்கள் புதிகாக கட்டப்படுகின்றன. மற்ற ரயில்வே ஸ்டேஷன்கள் புதுப்பிக்கப்படுகின்றன.
இந்த பணிகள் அனைத்தும் வரும் 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செங்கோட்டை-புனலுருக்கு இடையே அகல ரயில் பாதை பணிகள் விரைவில் துவக்கப்படும். இந்த வழித்தடத்தில் உள்ள ஆரியங்காவு உள்ளிட்ட 4 குகைகளையும் விரிவுப்படுத்தப்பட்டு அகல ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
இதற்காக சிறப்பு சிலிப்பர் கட்டை கொண்டு தண்டவாளம் போடப்படுகிறது. மேலும் குகைகளை விரிவுபடுத்தும்போது அதனை கான்கீரிட் மூலம் உறுதிபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து விழுப்புரம் வரை இருவழி ரயில் பாதை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு-விழுப்புரம் வரை 103 கிமீ தூரத்திற்கு 400 கோடியில் இருவழிபாதையும், மின்மயமாக்குதல் பணியும் நடந்து வருகிறது.
தொடர்ந்து விழுப்புரம்-திண்டுக்கல் வரை 273 கிமீ தூரத்திற்கு ரூ.1,400 கோடியில் இருவழிப்பாதை, மின்மயமாக்குதல் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிவடையும் என்றார் அவர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications