நிதி மோசடி:2 ஊராட்சி தலைவர்கள் டிஸ்மிஸ்-கலெக்டர் உத்தரவு
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் கிராம மக்களுக்கான ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மோசடி செய்த இரண்டு ஊராட்சி ஒன்றிய தலைவர்களை மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் டிஸ்மிஸ் செய்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கிராம மக்களுக்கு ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மோசடி செய்த இறையூர் ஊராட்சி தலைவர் ராமலிங்கம், கிளாவடி ஊராட்சி தலைவர் குமார் ஆகியோரை பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் திட்ட மதிப்பில் முறைகேடு செய்யப்படுவதாகவும், கிராம மக்களுக்கு ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் முழுமையான சம்பளம் வழங்கப்படுவதில்லை என்றும் மாவட்ட கலெக்டருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதனைத் தொடர்ந்து கடலூர் கலெக்டர் சீதாராமன் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் செயல்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நல்லூர் ஒன்றியம் இறையூர் கிராம பஞ்சாயத்தில் மக்கள் நல திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
அதேபோல் புவனகிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிளாவடியில் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இறையூர் ஊராட்சி தலைவர் ராமலிங்கம், கிளாவடி ஊராட்சி தலைவர் குமார் ஆகியோரை பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் சீத்தாராமன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications