வெடி தொழிற்சாலை விபத்து-மபி.யில் 30 பேர் பலி?
போபால்: மத்திய பிரதேசத்தில் வெடிமருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 30 பேர் வரை பலியாகி இருப்பார்கள் என அஞ்சப்படுகிறது. இதில் இரண்டு தொழிற்சாலைகள் தரைமட்டமாகிவிட்டன.
மத்திய பிரதேச மாநிலம் சிங்கிரவ்ளி மாவட்டத்தில் பைர்கான் தொழிற்பேட்டை உள்ளது. இங்கிருந்த ஐடியல் வெடிமருந்து தயாரிப்பு தொழிற்சாலையி்ல் சுரங்க வேலைகளுக்கு தேவையான வெடிபொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று பின்னிரவில் இந்த வெடிபொருள் தொழிற்சாலையின் ஒரு பகுதியில் பயங்கர சத்தத்துடன் வெடிமருந்து வெடித்து சிதறியது. பின்னர் அது தொழிற்சாலையின் அனைத்து பகுதிகளுக்கும் பரவி பெரும் கோர விபத்தாக மாறியது.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியில் ஓடினர். இதில் விபத்தில் அந்த தொழிற்சாலை சின்னாபின்னமானது. பலர் இடிபாடுகளுக்கு சிக்கி கொண்டனர்.
மேலும், அருகிலிருந்த ராஜஸ்தான் வெடிபொருள் தொழிற்சாலைக்கு இது பரவியது. இதில் அந்த நிறுவனம் முற்றிலுமாக சேதமடைந்தது. இதை தவிர அருகிலிருந்த 15 நிறுவனங்களுக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஏற்பட்ட வெடி சத்தம் பல கிமீ., தூரத்துக்கு அப்பால் இருந்தவர்களுக்கும் கேட்டதாக கூறப்படுகிறது.
இந்த விபத்தில் சுமார் 30 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 100க்கணக்கானோர் காயமடைந்திருப்பதாக தெரிகிறது. அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. மீட்பு பணிகள் முழு வேகத்தில் நடந்து வருகிறது.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications