பாதுகாப்புத்துறைக்கு ரூ. 1,41,703 கோடி ஒதுக்கீடு!
டெல்லி: நாட்டின் பாதுகாப்புத்துறைக்கான பட்ஜெட் 34 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் இன்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
கடந்த 2008-09ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ. 1,05,600 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. இது 2009-10ம் ஆண்டில் ரூ. 1,41,703 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 34 சதவீதம் அதிகமாகும்.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினர் அனைவருக்கும் ஒரே தரம், ஒரே பென்ஷன் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் 12 லட்சம் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு கூடுதல் பென்ஷன் கிடைக்கும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 2,100 கோடி கூடுதல் செலவாகும்.
அதே நேரத்தில் அதிகாரிகளுக்கான பென்ஷனி்ல் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ராணுவத்தினருக்கு நிகராக துணை ராணுவப் படையினருக்கு படிகள் வழங்கப்படும்.
துணை ராணுவத்தினருக்கு சிறப்பு வீட்டு வசதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு நாடு முழுவதும் 10,000 வீடுகள் கட்டப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications