வங்கதேசத்திலிருந்து கடத்தப்படும் கொசு வலையால் தொழில் பாதிப்பு
திருச்சி: வங்கதேசத்திலிருந்து அதிக அளவில் கடத்தப்பட்டு வட இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கொசு வலைகளால், உள்ளூரில் தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதாக திருச்சி மலைக்கோட்டை நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செயலாளர் கெளஸ் பெய்க் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனுக்கு விடுத்துள்ள கோரிக்கை..
வங்கதேசத்திலிருந்து பெருமளவில் கொசு வலைகள் தமிழகத்திற்குக் கடத்தி வரப்புகின்றன. இதன் காரணமாக உள்ளூர் கொசு வலை தயாரிப்புப் பிரிவுகள் பெரும் நசிவைச் சந்தித்து வருகின்றன.
கரூர், சேலம் மாவட்டங்களில் கொசு வலை தயாரிப்பு பெரும் தொழிலாக நடந்து வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் கொசு வலைகள் வட இந்தியாவுக்கு விற்பனையாகிறது.
இந்த நிலையில் வங்கதேச கொசு வலைகள் அங்கிருந்து நம் நாட்டுக்குக் கடத்தி வரப்படுகின்றன. மிகக் குறைந்த விலையில் இவற்றை வட மாநிலங்களில் விற்பனை செய்கிறார்கள். இதனால் அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, எங்களது தொழிலும் பாதிக்கப்படுகிறது.
மேலும் உள்ளூர் தொழில் நசிவடைவதோடு, தொழிலாளர்கள் பெருமளவில் வேலையிழப்பை சந்திக்கும் நிலையும் ஏர்படுகிறது.
ஏற்கனவே கச்சா பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வங்கதேச கடத்தல் கொசுவலையால் எங்களது நிலை மேலும் மோசமடைந்துள்ளது.
எனவே இந்த கொசுவலை கடத்தலைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் பெய்க்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications