பெரியாறு அணை பலமிழந்துவிட்டது: கேரளா சொல்லியாச்சு...
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணை பலமிழந்து விட்டது என்று கேரள எம்.பிக்கள் குழுத் தலைவர் தாமஸ் கூறியுள்ளார்.
கேரள முதல்வர் அச்சுதானந்தன் தலைமையில், கேரள நீர்ப் பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன் முன்னிலையில் அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு கூட்டம் நடந்தது.
அதில், இடுக்கி தொகுதி காங்கிரஸ் எம்.பி. தாமஸ் தலைமையில், பெரியாறு அணை பிரச்சனையில் கேரள எம்பிக்கள் செயல்படுவது என முடிவு செய்யப்பட்டது.
இந் நிலையில், தாமஸ் இடுக்கி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசுகையி்ல்,
பெரியாறு அணை வலுவிழந்துவிட்டது. பல இடங்களில் நீர்க்கசிவு ஏற்பட்டு அபாயகரமான நிலை காணப்படுகிறது.
முதல் கட்டமாக கேரள எம்பிக்கள் குழு தமிழக எம்பிக்களைச் சந்தித்து பெரியாறு அணை நிலைமையை விளக்குவது, அணைக்கு தமிழக எம்பிக்களை அழைத்துச் சென்று நேரில் விளக்கவது என்றும் முடிவு செய்துள்ளோம்.
மேலும் தமிழக, கேரள முதல்வர்கள் பேச்சு நடத்தவும், பிரதமர் தலைமையில் இரு மாநில முதல்வர்களும் பெரியாறு அணை பற்றி பேசவும் ஏற்பாடு செய்ய உள்ளோம்.
தற்போது பெரியாறு அணை பலவீனமாக உள்ளதால் புதிய அணை கட்டி தமிழகத்துக்குத் தொடர்ந்து இதுவரை கிடைத்துவந்த நீரை வழங்குவது, பெரியாறு அணை தொடர்பாக இரு மாநில அரசுகளும் ஏற்கெனவே செய்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நீடிக்கச் செய்வது என்றும் இதனால் தமிழகத்துக்குரிய உரிமைகள் தொடர்ந்து கிடைப்பதுடன், கேரள மக்களுக்கும் பாதுகாப்பு கிடைக்கும் என்பதையும் தமிழகத்துக்கு விளக்குவது என முடிவு செய்துள்ளோம் என்றார்.
ரொம்ப நல்லவரு...
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
Kerala: கேரளா காருண்யா லாட்டரி டிக்கெட்.. ரூ.1 கோடியை தட்டி தூக்கிய பாலக்காடு அதிர்ஷ்டசாலி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications