900 ஆண்டு பழமை வாய்ந்த இந்துக் கோவிலில் முஸ்லீம் பூசாரிகள்

காஷ்மீர் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள ஒரே இந்துக் கோவில் இதுதான். லிட்டர் ஆற்றுக் கரையோரம் இந்தக் கோவில் உள்ளது. இக்கோவிலின் வயது 900 என்று கூறப்படுகிறது.
இந்தக் கோவிலில் தற்போது முகம்மது அப்துல்லா, குலாம் ஹசன் ஆகிய இரு முஸ்லீம்கள்தான் பூசாரிகளாக இருந்து செயல்பட்டு வருகின்றனர். காரணம், இப்பகுதியை விட்டு காஷ்மீரி இந்து பண்டிட்டுகள் இடம் பெயர்ந்து சென்று விட்டதால் முஸ்லீ்ம்களே பூசாரிகளாக உள்ளனர்.
இருவரும் கோவில் கதவுகளைத் திறந்து வைத்து கோவில் மணியை அடித்து பூசை செய்கின்றனர்.
இதுகுறித்து குலாம் ஹசன் கூறுகையில், கோவிலை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், தினசரி ஆரத்தி எடுத்து பூஜையும் செய்கிறோம்.
அதேபோல கோவிலுக்கு வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் பிரசாதமும் தவறாமல் தருகிறோம். இங்குள்ள 3 அடி உயரமுடைய கருப்பு சிவலிங்கத்தையும் நாங்கள் பாதுகாப்பாக பார்த்துக் கொள்கிறோம் என்றார்.
முன்பு அமர்நாத் யாத்திரை செல்வோர் தவறாமல் இந்தக் கோவிலுக்கும் வந்து செல்வார்களாம். இப்போது அவர்கள் யாரும் வருவதில்லையாம். எப்போதாவதுதான் பக்தர்கள் வருவார்களாம்.
ராஜா ஜெயசூரியா என்பவர் இந்தக் கோவிலை கட்டியுள்ளார்.
இந்துக்கள் இப்பகுதியை விட்டுப் போய் விட்டாலும் கூட அவர்களின் கோவிலை இரு முஸ்லீம் பூசாரிகள் பார்த்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல், பூசையும் செய்வது மத நல்லிணக்கம் இன்னும் மட்கிப் போய் விடவில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications