ரவுடிகளை களையெடுக்க தயாராகும் சென்னை போலீஸ்
சென்னை: சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறியில் ஈடுபட்டு வரும் ரவுடிகளின் அட்டகாசத்தை ஒடுக்க ரவுடிகளின் பட்டியலை போலீசார் தயாரித்து வருகின்றனர். விரைவில் இதன் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் கடந்த சில மாதங்களாக கொலை, கொளை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. நகை கடை புரோக்கர் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட வழக்கில் சுமார் ஒரு மாதங்கள் ஓடிவிட்ட நிலையில் போலீசாருக்கு இதுவரை எந்த துப்பும் கிடைக்கவில்லை.
அதே நேரத்தில் சென்னையில் இந்த காலக்கட்டத்தில் வழிப்பறி சம்பவங்களும் பல மடங்கு அதிகரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து போலீசார், சென்னை போலீஸ் கமிஷ்னர் ராஜேந்திரன் உத்தரவின் பேரில் இந்த சம்பவங்களுக்கு காரணமாக கூலி படையினர் மற்றும் ரவுடி கும்பல்கள் குறித்து பட்டியல் தயாரித்து வருகின்றனர்.
அவர்களை ஏ, பி, சி மற்றும் டி என நான்கு பிரிவுகளாக பிரித்து அதற்கேற்றவாறு விரைவில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த பட்டியல் தயாரிப்பு பணிகளை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர் ரவுடி ஒழிப்பு பிரிவு உதவி கமிஷனர் கண்ணப்பன் தலைமையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் வடசென்னை ரவுடி ஒருவருக்கும், அரசியல் செல்வாக்குடன் சுற்றி வரும் திண்டுக்கல் தாதாவுக்கும் போலீசார் அதிர்ச்சி அளிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், சென்னையில் கட்ட பஞ்சாயத்து மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டுவிட்டு ஆந்திராவுக்குள் சென்று ஒழிந்து கொள்ளும் சில தாதாக்களை போலீசார் குறிவைத்துள்ளனர்.
இதன்மூலம் ரவுடிகள் மத்தியில் ஒரு பயத்தையும், பொது மக்கள் மத்தியல் காவல் துறை மீது ஒரு நல்லெண்ணத்தை ஏற்படுத்தவும் போலீசார் முயன்று வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications