திருச்சியில் 4 பிகார் ரயில் கொள்ளையர்கள் கைது
திருச்சி: பிகாரை சேர்ந்த நான்கு ரயில் கொள்ளையர்களை திருச்சி ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக ரயில் நிலையங்களிலும், ரயில்களிலும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வந்தன. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட கும்பல் பல பகுதிகளிலும் மக்களோடு கலந்து அவர்கள் தூங்கிய பின்னரும், சில சமயங்களில் கத்தி போன்ற ஆயுதங்களை காட்டியும் கொள்ளையடித்து வந்தனர்.
இந் நிலையில் கொள்ளை புகார் கொடுத்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த ரயில் கொள்ளையர்கள் தமிழர்கள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் திருச்சி ரயில்வே போலீசார், பிகார் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அங்கு அவர்கள் ஜிதேந்தர் என்பவரை கைது செய்து தமிழகம் கொண்டு வந்தனர். பின்னர் அவனிடம் விசாரணை செய்து திருச்சியில் தங்கியிருந்த மேலும் மூன்று பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ. 6 லட்சம் மதிப்பு கொண்ட நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ரயில்வே போலீசார் கொள்ளை சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications