போலீசுக்கு கத்தி குத்து-தடா கைதி ஆத்திரம்
நெல்லை: நீதிமன்ற விசாரணைக்கு செல்ல மறுத்த தடா கைதி ஒருவர் காவலுக்கு வந்த போலீஸ்காரரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து முன்னமணி தலைவர் ராஜகோபாலன் கொலை வழக்கில் தடா சட்டத்தின் கீழ் கைதான அப்துல் அஜூஸ் என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்காக நேற்று அப்துல் அஜூசை நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக இன்ஸ்பெக்டர் ரத்தினவேல், எஸ்ஐ ஆபிரகாம், போலீஸ்காரர்கள் அருணாசலம், சரவணன், பழனிவேல், சண்முகவேல் ஆகியோர் அவரை வேனில் ஏற்றினர்.
அப்போது வேனில் ஏற மறுத்த அப்துல் அஜூஸ், போலீசாருடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரமடைந்து இன்ஸ்பெக்டர் ரத்தினவேலு, எஸ்ஐ ஆபிரகாம் ஆகியோரை தாக்கினார். இதில் ரத்தினவேலுவின் சட்டை கிழிந்தது.
இதையடுத்து போலீஸ்காரர் அருணாசலம் அஜீசை தடுக்க சென்றார். அப்போது அஜீஸ் அவர் கையிலிருந்த துப்பாக்கியை பிடுங்கி, அதிலிருந்த கத்தியால் அவரை குத்தினார். இதில் அருணாசலத்துக்கு ரத்த காயம் ஏற்பட்டது.
தொடர்ந்து கலாட்டா செய்த அருணாசலம் அங்கு வந்த ஆயுதபடை உதவி் கமிஷனர் ராஜாவையும் தாக்க முயற்சித்தார். பின்னர் ஒரு வழியாக போலீசார் அவரை மடக்கினர்.
காயமடைந்த எஸ்ஐ ஆபிரகாம், போலீஸ்காரர் அருணாசலம் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்ததும் மாநகர துணை கமிஷனர் ஜெயசந்திரன் அங்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications