மீனவர்களுக்காக ஒன்றுபட்ட தமிழக எம்.பிக்கள்
டெல்லி: தமிழக மீனவர்களை துன்புறுத்தி வரும் இலங்கை கப்பற்படையின் கொடூர செயல்களை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக எம்.பிக்கள் அனைவரும் இன்று ஒற்றுமையாக ஒரே குரலில் பேசினர்.
கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கப்பற்படையினரால் எண்ணிலா துயரத்தை அனுபவித்து வருகின்றனர். மீனவர்கள் தாக்கப்படுவதும், அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை திருடி கொண்டு செல்வதும், மீனவர்களை கடலுக்குள் தள்ளிவிடுவதுமென இலங்கை ராணுவம் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகிறது.
சில மீனவர்களை கைது செய்து கொண்டு போய்விடுகிறார்கள். சமீபத்தில் கடத்தப்பட்ட 20 மீனவர்களின் நிலைமை என்னவானது என்பது தெரியவில்லை. இவை அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என இன்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் இரண்டு அவைகளிலும் தமிழக எம்.பி.க்கள் ஒரு சேர கோரிக்கை விடுத்தனர்.
இந்த பிரச்சனை குறித்து மாநிலங்களவை உறுப்பினராக இருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா கூறுகையில்,
இலங்கை கப்பற்படை நான்கு படகுகளையும் கைப்பற்றியுள்ளது. இதுவரை 100 மீனவர்கள் காணாமல் போய்விட்டனர். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. மீனவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
அவரது கருத்துக்கு மாநிலங்களவையில் இருந்த தமிழகத்தை சேர்ந்த மற்ற கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர்.
மக்களவையில் ராமநாதபுரம் திமுக எம்.பி.யும், நடிகருமான ஜேகே ரித்திஷ் பேசுகையில்,
இலங்கை ராணுவம் தமிழக மீனவர்களை சித்ரவதை செய்கிறது. கச்சத்தீவு பகுதியில் மீன்பிடி வலைகளை உலர்த்தவும், ஓய்வெடுக்கவும் தமிழக மீனவர்களுக்கு உரிமை இருக்கிறது.
ஆனால் இலங்கை அரசு அதை மதிப்பதில்லை. இந்த பிரச்சனைக்கு விரைவில் நிரந்தர தீர்வு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்றார் ஜேகே ரித்திஷ். இவரது கருத்துக்கு மக்களவையில் இருந்த தமிழக எம்.பி.க்களை ஆதரவு தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications