இந்திரா இருந்திருந்தால் இது நடந்திருக்காது-நெடுமாறன்
கோவை: இந்திரா காந்தி மட்டும் இப்போது உயிரோடிருந்திருந்தால் நிச்சயம் ஈழத்தில் தமிழர்கள் ரத்தம் சிந்தியிருக்க மாட்டார்கள். இத்தனை படுகொலைகள் நடந்திருக்காது என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று அவர் பேசுகையில், அமெரிக்கா தலைமையிலும், சோவியத் ரஷ்யா தலைமையிலும் உலகம் இரண்டாக காணப்பட்டது. ராணுவ உடன்பாட்டு நாடுகள் உருவாக்கப்பட்டது.
3ஆம் உலகப்போர் வரும் என்ற அச்சம் நிலவிய போது அணிசேரா நாடுகள் கூட்டமைப்பை ஏற்படுத்தினார் ஜவஹர்லால் நேரு. இதனால் 3ஆம் உலகப்போர் தடுக்கப்பட்டது. ஒரு நாடு மற்றொரு நாட்டை ஆக்கிரமிக்கும் போது குரல் கொடுத்தது அப்போதைய இந்தியா.
நேருவை தொடர்ந்து இந்திராகாந்தியும் அணிசேரா கொள்கையை தொடர்ந்து கடைப்பிடித்தார். வாஜ்பாயும் பின்பற்றினார்.
ஆனால் ராஜீவ்காந்தி காலத்தில் கொள்கை அடியோடு மாற்றப்பட்டது.
இன்று இலங்கையில் சீனா, மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் காலூன்றி விட்டன. இலங்கை அரசின் ராணுவ வெற்றிக்கு 20 நாடுகள் உதவி செய்ததே காரணம் என்று அந்த நாடு கூறியுள்ளது. இலங்கையில் சீனா ஆயுத கிடங்கை திறக்க இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்திரா காந்தி மட்டும் இன்னேரம் உயிரோடு இருந்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது. தமிழர்கள் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள் என்றார் நெடுமாறன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications