மாறுவேடத்தில் கமாண்டோக்கள்-திருச்செந்தூரில் பரபரப்பு
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே போலீசாருக்கு, தீவிரவாதிகளை பிடிப்பது குறித்து கமாண்டோக்கள் பயிற்சி அளித்தனர். அப்போது பொது மக்கள் கமாண்டோக்களை உண்மையான தீவிரவாதிகள் என நினைத்துவிட்டனர். அவர்களிடம் நிலைமை விளக்குவதற்குள் போலீசாருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதியில் நேற்று போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருச்செந்தூருக்கு அடுத்த வீரபாண்டியன் பட்டிணம் அடுத்த கடலோர கிராமமான ஜெ ஜெ நகர் பகுதியில் அடையாளம் தெரியாத 7 பேர் கொண்ட மர்ம கும்பல் உலவுவதாக தகவல் கிடைத்தது.
இது பற்றி தெரிய வந்தவுடன் கடலோர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். போலீசாரின் அதிரடி வேட்டையில் ஜெஜெ நகர் பைரவர் கோயில் மற்றும் அப்பகுதியில் சுற்றி திரிந்த மர்ம கும்பலை சேர்ந்த 6 பேர் உடனடியாக சிக்கினர்.
சற்று தாமதமாக அந்த கும்பலை சேர்ந்த மற்றொருவரும் பிடிபட்டார். இதனை கண்டவுடன் அந்த பகுதி மக்கள் பிடிபட்டது தீவிரவாதிகள் என்று கருதியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆண்களும், பெண்களும் கூட்டமாக திரண்டனர். பிறகுதான் நடந்த சம்பவம் ஓத்திகை நிகழ்ச்சி என்று பொதுமக்களுக்கு போலீஸ் அதிகாரிகள் விளக்கினர். எனினும் பொதுமக்கள் நம்ப மறுத்துவிட்டதால் அதனை ஊர்ஜிதப்படுத்துவதற்குள் போலீசாருக்கு போதும் போதும் என்றாகிவிட்டது.
மாறுவேடத்தில் படகு மூலம் அந்த பகுதியில் புகுந்த 7 பேரும் சென்னையை சேர்ந்த கமாண்டோ படையினர் ஆவார்கள்.
பரபரப்பை ஏற்படுத்திய இந்த நாடகத்தில் கடலோர காவல் படை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிரத்தினம், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சந்திரபால், ஸ்டான்லி ஆகியோரும் பங்கேற்றனர்.
இந்த சம்பவம் நடைபெறும் முன்பு சந்தேகப்படும் படியான மனிதர்கள் யாரேனும் கடலோர கிராம பகுதியில் புகுந்தால் போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என போலீசார் முன்கூட்டியே விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தனர்.
இதனால் மாறுவேடத்தில் புகுந்த அக்கும்பல் பற்றி அப்பகுதி பைரவர் கோயில் பூசாரி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். மொத்தத்தில் போலீசாரின் பாதுகாப்பு நடவடிக்கையால் உயர் போலீஸ் அதிகாரிகள் திருப்தி அடைந்துள்ளனர்.
ஆனால், அடுத்த முறை நிஜமான தீவிரவாதிகள் வந்தால் கூட பொது மக்கள் கமாண்டோக்கள் என நினைத்து விட்டுவிடுவார்கள். இது போன்ற சோதனைகளை போலீசார் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வைத்து கொள்ள வேண்டும். எங்களை போட்டு குழப்ப வேண்டாம் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications