மதுரை ஐ.டி ஏற்றுமதி 88% அதிகரிப்பு!
சென்னை: சாப்ட்வேர் ஏற்றுமதியில் மதுரை மாபெரும் வளர்ச்சியை எட்டிப் பிடித்துள்ளது. அந்த நகரிலிருந்து ஏற்றுமதியான சாப்ட்வேரின் அளவு 88 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழக ஐ.டி. துறைச் செயலாளர் பி.டபிள்யூ.சி. டேவிதார் கூறுகையில்,
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை தான் இந்தத் துறையில் மிக வேகமான வளர்ச்சிக் காட்டி வருகிறது. 2007-08ம் ஆண்டில் ரூ. 14.36 கோடிக்கு சாப்ட்வேர் ஏற்றுமதி செய்த மதுரை கடந்த ஆண்டு ரூ.27.09 கோடியை எட்டிப் பிடித்துள்ளது. இது 88 சதவீத வளர்ச்சியாகும்.
அதே போல கோவையின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ 367.26 கோடியிலிருந்து ரூ. 373.76 கோடியாக உயர்ந்துள்லது.
திருச்சியின் சாப்ட்வேர் ஏற்றுமதி ரூ. 23.84 கோடியிலிருந்து ரூ 24.03 கோடியாக உயர்ந்துள்ளது.
ஐ.டி. துறைக்கென தனி கொள்கை அறிவிக்கப்பட்டு இரண்டாம் கட்ட நகரங்களில் திருச்சி, மதுரை, திருநெல்வேலியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
மதுரையில் உள்கட்டமைப்பு பணிகள் முடியும் நிலையில் உள்ளன. திருச்சியில் 9 நிறுவனங்கள் தங்களது கிளைகளை தொடங்க ஆர்வமாக உள்ளன. அடுத்து சேலம், ஓசூரில் கவனம் செலுத்த உள்ளோம்.
கோவையில் கட்டப்பட்டு வரும் டைடல் பூங்கா பணிகள், வரும் டிசம்பரில் முடிவடையும்.
ஐ.டி. சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் 2008-09ம் ஆண்டில் மட்டும் ரூ.3,063 கோடி அளவுக்கு தமிழகத்தில் முதலீடுகள் ஈட்டப்பட்டுள்ளன என்றார்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
HCL: 200 ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்.. கையைவிட்டு போகும் 2வது அமெரிக்க டீல்.. அதிர்ச்சியில் ஐடி துறை -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
Tasmac: மதுபானம் விற்கலாம்! ஆனால் சுயமரியாதையை விற்க முடியாது! மதுரை கிளை நீதிபதி அதிருப்தி!












Click it and Unblock the Notifications