வீராசாமி வழக்கு-வைகோ கோர்ட்டில் ஆஜர்
சென்னை: அவதூறு வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார்.
இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் முதல்வர் கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் நடந்ததாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேசினார். இதையடுத்து அவர் மீது சென்னை எழும்பூர் தலைமை மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
கருணாநிதி சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகும்படி வைகோவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
இதன் பேரில் நேற்று காலை 10.30 மணிக்கு கோர்ட்டில் வைகோ ஆஜரானார். மாஜிஸ்திரேட்டு சேதுமாதவன் வழக்கு விசாரணையை நடத்தினார். கோர்ட்டில் வைகோவுக்கு வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
பின்னர் வழக்கு விசாரணை வருகிற 14-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
பின்னர் வெளியில் வந்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரசியல் பழி வாங்கும் நோக்கத்தோடு இந்த வழக்கு என் மீது போடப்பட்டுள்ளது. இப்போது ஒரு குடும்பத்திடம் சிக்கி, ஆட்சி சீரழிகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை விலை கொடுத்து வாங்கி ஆளுங்கட்சி வெற்றி பெற்றது. இந்த நிலை நீடிக்காது. ஊழலில் திரட்டப்பட்ட பணத்தை கொடுத்து தான் ஓட்டு கேட்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளும்போது, பண வெள்ளத்தை தாண்டி மக்கள் வெள்ளம் தீர்ப்பளிக்கும். அந்த காலம் வரத்தான் போகிறது என்றார் வைகோ.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications