வருண் பாதுகாப்பு-ப.சி மீது சுஷ்மா பாய்ச்சல்
டெல்லி: வருண் காந்தியின் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்துவிட்டு வந்த பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், சிதம்பரம் தந்த பதில் திருப்தி அளிக்கவில்லை என்று புகார் கூறினார்.
வருண் காந்திக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக மக்களவையில் விவாதம் நடந்தபோது, அவரது பாதுகாப்பு குறித்து விளக்கமாக தெரிந்து கொள்ள வேண்டுமானால் என்னை நேரில் சந்தித்துத் தெரிந்து கொள்ளுங்கள் என்று சிதம்பரம் கூறினார். மேலும் இது தொடர்பாக சுஷ்மா ஸ்வராஜுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த சுஷ்மா, வருண் பாதுகாப்பு தொடர்பாக தனக்கு எழுதிய கடிதத்தை சிதம்பரம் பகிரங்கப்படுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார்.
இந் நிலையில் சிதம்பரத்தை நேரில் சந்தித்து வருண் விவகாரம் குறித்துப் பேசிவிட்டுத் திரும்பிய சுஷ்மா நிருபர்களிடம் பேசுகையில், சிதம்பரம் அளித்த விளக்கத்தில் எனக்கு திருப்தியில்லை என்றார்.
ஆனால் வருண் பாதுகாப்பு தொடர்பாக சிதம்பரம் தெரிவித்த விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார்.
தனது மகனின் பாதுகாப்பு விஷயத்தில் ப. சிதம்பரம் மெத்தனமாக இருப்பதாக மேன காந்தி குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications